ADVERTISEMENT

UAE: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் ராஸ் அல் கைமா!! இலவச அனுமதியுடன் சிறப்பு வாணவேடிக்கை நிகழ்வுகள் அறிவிப்பு….

Published: 19 Nov 2024, 5:11 PM |
Updated: 19 Nov 2024, 5:11 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகப்பெரிய அளவில் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்தவகையில், இந்தாண்டு ராஸ் அல் கைமா எமிரேட்டானது புத்தாண்டு நிகழ்விற்காக ஒரு மெகா கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பின் படி, RAK NYE ஃபெஸ்டிவல் வருகின்ற டிசம்பர் 31, 2024 அன்று நடைபெறும் மற்றும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச நுழைவு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், உணவு மற்றும் பானங்களுடன் சில நடவடிக்கைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடம் BM ரிசார்ட்டிலிருந்து 4 நிமிட பயணத்தில் அமைந்துள்ளது என்றும், ஃபெஸ்டிவல் நடைபெறும் மைதானத்திற்கு அருகில் பார்க்கிங் இடங்களைக் கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பலவிதமான சுவை மிகுந்த உணவுகளை விநியோகிக்கும் ஃபுட் டிரக்குகள் உட்பட பல வசதிகள் இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வாணவேடிக்கை நள்ளிரவுக்கு முன்பே தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், மர்ஜான் ஐலேண்ட் முழு பகுதி, மர்ஜன் ஐலேண்ட் மற்றும் அல் ஹம்ரா வில்லேஜுக்கு இடையே உள்ள வாட்டர்ஃபிரண்ட் பகுதி, RAK NYE ஃபெஸ்டிவல் கிரவுண்ட் மற்றும் தயாஹ், ஜய்ஸ், யனாஸ் மற்றும் ரம்ஸ் போன்ற பார்க்கிங் பகுதிகள் உட்பட பல முக்கிய இடங்களிலிருந்து பார்வையாளர்கள் வானவேடிக்கைகளை இலவசமாக அனுபவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BBQ மற்றும் கேம்பிங்

அல் ராம்ஸ் பார்க்கிங் மண்டலத்தில் மட்டுமே BBQ அனுமதிக்கப்படுகிறது, இதில் நியமிக்கப்பட்ட BBQ பகுதிகள் உள்ளன. இந்த பகுதி குடும்பத்திற்கு ஏற்றது என்றும், கிரில் செய்வதற்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை வழங்குகிறது என்றும் கூறப்படுகின்றது. இந்தப் பகுதியைப் பயன்படுத்த, உங்கள் வாகனத்தை ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

கூடுதலாக, கேரவன்கள் அல்லது RVகளை கொண்டு வருபவர்களுக்கு, ஃபெஸ்டிவல் கிரவுண்டிற்கை எதிரே தயா பார்க்கிங் மண்டலம் விசாலமான கேம்பிங் வசதிகளை வழங்குகிறது. அத்துடன் டென்ட் கேம்பிங்கை விரும்புபவர்களுக்கு அல் ராம்ஸ் பார்க்கிங் மண்டலம் BBQ வசதிகளுக்கான அணுகலுடன் நியமிக்கப்பட்ட பகுதிகளை வழங்குகிறது. இரண்டு மண்டலங்களும் நிகழ்வுக்கு அருகில் உள்ளன, அதே நேரத்தில் வசதியான கேம்பிங் அனுபவத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் சீரான நுழைவு மற்றும் வெளியேறுவதை உறுதிசெய்ய, வாகனத்தின் முன் பதிவு கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel