துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நகரத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, மாறுபட்ட சாலை கட்டண விலை (Variable Road Toll Pricing – salik) மற்றும் மாறுபட்ட பார்க்கிங் கட்டணக் கொள்கைகளை (Variable Parking Tariff Policies) செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்படும் இந்த மாறுபட்ட சாலை சுங்க கட்டண முறையின் கீழ், ஷேக் சையத் சாலையில் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சாலிக் கேட் வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணமில்லா இலவச பயணத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வார நாட்களில், காலை 6 முதல் 10 மணி வரை பீக் ஹவர்ஸிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பீக் ஹவர்ஸிலும் டோல் கட்டணம் 6 திர்ஹம்ஸ் ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாகன நெரிசல் அதிகம் இல்லாத நேரங்களில், அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் சாலிக் கேட் வழியாக பயணிப்பதற்கான கட்டணம் 4 திர்ஹம்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், பொது விடுமுறைகள், சிறப்பு சந்தர்ப்பங்கள் அல்லது முக்கிய நிகழ்வுகள் தவிர்த்து மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் கட்டணம் 4 திர்ஹம்ஸ் ஆகவும், அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel