ADVERTISEMENT

உலகளவில் மக்களின் ‘Dream Destination’ ஆக மாறிய அமீரகம்..!! சுற்றுலா, இடம்பெயர்வுக்கு சிறந்த இடமாக தேர்வு..!!

Published: 8 Nov 2024, 10:07 AM |
Updated: 8 Nov 2024, 3:18 PM |
Posted By: Menaka

உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் நாடுகளைப் பற்றிய பயனர் வழங்கிய தரவுகளைக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய தரவுத்தளமான Numbeo வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, சுற்றுலா மற்றும் இடம்பெயர்வுக்கான முதல் 10 கனவு இடங்களுக்குள் ஐக்கிய அரபு அமீரகம் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆஸ்திரேலியா (2.34 சதவீதம்), பிரான்ஸ் (2.19), சுவிட்சர்லாந்து (2.09 சதவீதம்) மற்றும் நெதர்லாந்து (1.99 சதவீதம்) ஆகிய நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி,  2.56 சதவீத தேடல்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தரவு காட்டுகிறது.

அதே நேரத்தில் உலக அளவில், சுமார் 5.31 சதவீதத்துடன் அமெரிக்கா பட்டியலில் முதலிடத்திலும், இங்கிலாந்து, கனடா, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் Covid-19 தொற்றுநோய்க்கு பிறகு, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் நிலையான மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புவதால், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தேர்வு செய்கின்றனர் என கூறப்படுகின்றது. அதேபோல், தொற்றுநோய்க்கு பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வலுவான சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது என்றும், இது தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையை விஞ்சியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமீரகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா நகரமான துபாய், 2023 இல் 17.15 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. மேலும், துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த இடமாக மாற்றுவதற்கான தங்கள் லட்சியங்களையும் இலக்குகளையும் அமீரக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT

Numbeo வெளியிட்ட தரவுகளின் படி, அமீரகம் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் முதல் 20 இடங்களுக்குள் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது. அதாவது, கனடா, எகிப்து, இந்தியா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, குவைத், மலேசியா, நேபாளம், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, துனிசியா, இங்கிலாந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் வசிப்பவர்களின் முதல் 5 கனவு இடங்களுள் ஐக்கிய அரபு அமீரகம் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல்,  எகிப்தியர்கள், ஓமானிகள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு இடம்பெயர்ந்து சுற்றிப் பார்ப்பதற்கான சிறந்த கனவு இடமாகவும் அமீரகம் இடம் பிடித்துள்ளது.

அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் எளிய செயல்முறை, சுற்றுலா துறையில் முன்னேற்றம், பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள், நவீன போக்குவரத்து வசதி என பல துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம் சிறந்து விளங்குவதால் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் விரும்பி செல்லக்கூடிய நாடாக அமீரகம் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel