ADVERTISEMENT

அல் அய்னில் நடக்கவிருக்கும் இராணுவ அணிவகுப்பு.. நேரில் கண்டுகளிக்க குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு..!!

Published: 27 Nov 2024, 8:42 AM |
Updated: 27 Nov 2024, 8:42 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுதப் படைகளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், வருகின்ற டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமையன்று “பெருமை மற்றும் விசுவாசம், உறுதிமொழி மற்றும் விசுவாசம், பாதுகாப்பு மற்றும் செழிப்பு” என்ற கருப்பொருளின் கீழ் ‘Union Fortress 10’ என்ற இராணுவ அணிவகுப்பு அல் அய்னில் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுதப் படைகளுக்கான பெருமையையும் போற்றுதலையும் பகிர்ந்து கொள்ளுமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகை தருபவர்கள் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் ‘யூனியன் ஃபோர்ட்ரெஸ் 10’ அணிவகுப்பை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெறலாம்.

இந்த அணிவகுப்பு ஐக்கிய அரபு அமீ்ரக ஆயுதப் படைகளின் பெருமையை நிரூபிப்பது மற்றும் அவர்களின் தொழில்முறை, திறன், சாத்தியமான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் தியாகங்கள் மற்றும் தேசத்தைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் அமீரகத்தின் ஆயுதப்படைகளின் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் பிரிவுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் உயர் தயார்நிலையை வெளிப்படுத்தக் கூடிய கூட்டு இராணுவ அணிவகுப்பு உட்பட பல நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும், ஆயுதப் படைகளின் மேம்பட்ட போர் திறன்களை எடுத்துக்காட்டும் கள காட்சிகள் மற்றும் பயிற்சிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், சில முக்கிய பிரிவுகள் விரைவான தலையீட்டு நடவடிக்கைகளில் தங்கள் மேம்பட்ட இராணுவ திறன்களை வெளிப்படுத்துவதுடன், தேசத்தைப் பாதுகாப்பதில் அவற்றின் நெகிழ்வுத்தன்மை மற்றும் செயல்திறன் குடியிருப்பாளர்கள் முன்னிலையில் எடுத்துக்காட்டப்படும்.

முதன்முதலாக மார்ச் 2017 இல் அபுதாபி கார்னிச்சில் தொடங்கப்பட்டதிலிருந்து, ‘யூனியன் ஃபோர்ட்ரெஸ்’ இராணுவ அணிவகுப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அல் அய்னில் இந்த இராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

அதாவது, நவம்பர் 2017 இல் ஷார்ஜாவிலும், பிப்ரவரி 2018 இல் அல் அய்னிலும், நவம்பர் 2018 இல் ஃபுஜைராவிலும், மார்ச் 2019 இல் அஜ்மானிலும், 2019 நவம்பரில் ராஸ் அல் கைமாவிலும், பிப்ரவரி 2020 இல் உம் அல் குவைனிலும், மார்ச் 2022 இல் எக்ஸ்போ 2020 துபாயிலும், நவம்பர் 2023ல் அபுதாபியில் உள்ள யாஸ் தீவிலும் நடத்தப்பட்டுள்ளன. தற்போது இதன் 10வது பதிப்பு டிசம்பர் 14 அன்று அல் அய்னில் மீண்டும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel