ADVERTISEMENT

உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோவை இயக்க தொடங்கவிருக்கும் சவூதி…

Published: 25 Nov 2024, 6:48 PM |
Updated: 25 Nov 2024, 6:56 PM |
Posted By: Menaka

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோவின் முதல் கட்டம் தொடங்கப்பட உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற நவம்பர் 27, புதன்கிழமை அன்று திட்டமிடப்பட்ட ஆறு வழித்தடங்களில் மூன்றில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மீதமுள்ள வழித்தடங்களில் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் செயல்பாடுகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரத்தில் பொது போக்குவரத்தை மாற்றும் ஒரு முக்கிய திட்டமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இந்தத் திட்டம், ரியாத்தின் நகர்ப்புற மாற்றம் மற்றும் சவூதி அரேபியாவின் பொருளாதார பல்வகைப்படுத்தல் இலக்குகளின் ‘Vision 2030’இன் மையப் பகுதியாக உள்ளது. மேலும் இந்த மெட்ரோ சேவையானது ரியாத்தில் கார் சார்ந்திருப்பதைக் குறைத்தல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் மற்றும் ரியாத்தை வணிகத்திற்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் கட்டமாக திறக்கப்படும் மூன்று வழித்தடங்கள், அல் ஒரூபா (Al Orouba) முதல் பாத்தா, கிங் காலித் சர்வதேச விமான நிலைய சாலை மற்றும் அப்துல்ரஹ்மான் பின் ஆஃப் ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் ஹசன் பின் ஹுசைன் ஸ்ட்ரீட்டின் இன்டர்செக்‌ஷன் உட்பட நகரம் முழுவதும் உள்ள முக்கிய வழிகளை இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, இரண்டாவது கட்டமாக டிசம்பர் நடுப்பகுதியில் செயல்படவுள்ள, கிங் அப்துல்லா சாலை, அல் மதீனா மற்றும் கிங் அப்துல்லாஜிஸ் சாலை ஆகியவற்றை உள்ளடக்கிய வழித்தடங்கள் நெட்வொர்க்கில் சேரும் என்றும், இது திறன் மற்றும் கவரேஜை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட $22.5 பில்லியன் மதிப்பீட்டிலான (SR84.4 பில்லியன்) மெட்ரோ திட்டம், லாஜிஸ்டிக் சவால்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தாமதத்தை எதிர்கொண்டது. இந்த பின்னடைவுகள் இருந்தபோதிலும், மெட்ரோவின் திறப்பு அதன் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் இராச்சியத்தின் முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

ADVERTISEMENT

அத்துடன் நிலைத்தன்மை என்பது ரியாத் மெட்ரோவின் வரையறுக்கும் அம்சம் என்று கோரப்பட்டுள்ளது. ஏனெனில், நிலையங்கள் மற்றும் டிப்போக்களில் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் முக்கியமான அமைப்புகளுக்குத் தேவையான ஆற்றலில் 20 சதவீதத்தை உருவாக்கும் என்றும், அதே நேரத்தில் ஆற்றல்-திறனுள்ள ரயில்கள் மற்றும் மீளுருவாக்கம் பிரேக்கிங் தொழில்நுட்பம் (regenerative braking technology) ஆகியவை மின் நுகர்வுகளைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, ஆறு வழித்தடங்களும் இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் என கூறப்படுகின்றது. இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ரியாத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பயணிகள் இந்த மெட்ரோவில் பயணிப்பதற்கு, வரும் நாட்களில் மெட்ரோ டிக்கெட் விலை மற்றும் தள்ளுபடி பேக்கேஜ்களை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel