ADVERTISEMENT

அபுதாபியில் மரணிக்கும் வெளிநாட்டவர்களின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்..!! DoH இன் மனிதாபிமான முயற்சி..!!

Published: 19 Dec 2024, 5:50 PM |
Updated: 19 Dec 2024, 5:50 PM |
Posted By: Menaka

அபுதாபி குடியிருப்பாளர்கள் அனைவரும் இப்போது எமிரேட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் இறந்தால் இறப்பு தொடர்பான அனைத்து கட்டணங்கள், சான்றிதழை வழங்குவது முதல் எம்பாமிங் மற்றும் உடல்களை திருப்பி அனுப்புவது வரை முழு ஆதரவைப் பெற முடியும் என்று அபுதாபியின் சுகாதாரத் துறை (DoH) இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 19) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகக் குடிமக்களுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரியில் தொடங்கப்பட்ட ‘சனாத்கோம்’ (Sanadkom) எனும் இந்த முன்முயற்சியானது, தற்போது அபுதாபி எமிரேட்டில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் பயன்பெறும் வகையில் அபுதாபி சுகாதாரத்துறையால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது குடும்பங்களில் ஏற்படும் மரணம் தொடர்பான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், இறப்புச் சான்றிதழைப் பெறுவது முதல் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்வது மற்றும் தேவைப்பட்டால், இறந்தவர் உடலை நாட்டிற்குத் திருப்பியனுப்புவது வரை அனைத்து உதவிகளையும் இந்த முன்முயற்சி வழங்குகிறது.

ADVERTISEMENT

மேலும், நேசிப்பவரை இழந்து தவிக்கும் கடினமான நேரத்தில், குடியிருப்பாளர்கள் செலவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இறப்புச் சான்றிதழை வழங்குதல், ஆம்புலன்ஸ் போக்குவரத்து, எம்பாமிங் செய்தல் மற்றும் இறந்தவரின் உடலை திருப்பி அனுப்புதல் தொடர்பான அனைத்து கட்டணங்களையும் சமூக பங்களிப்பு ஆணையம் (Authority of Social Contribution – Ma’an) ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து DoH இன் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் உறவுப் பிரிவின் நிர்வாக இயக்குநர் மாண்புமிகு ஹிந்த் அல் ஜாபி பேசிய போது, “நேசிப்பவரை இழப்பதால் ஏற்படும் உணர்ச்சிப் பாதிப்பை உணர்ந்து, சனாத்கோம் முன்முயற்சி இரக்கமுள்ள ஆதரவை வழங்குகிறது, துயரமடைந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நடைமுறைகளின் மூலமாகவும் இது வழிகாட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

Sanadkom முன்முயற்சி பற்றிய விபரங்கள்

  1. மரண அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சனாத்கோம் குழுவினர் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவார்கள்.
  2. இந்த குழு முன்முயற்சியின் சேவைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும்
  3. பின்னர், குடும்பம் முடிக்க வேண்டிய அனைத்து நடைமுறைகளுக்கும் உதவ ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார்.
  4. குடியிருப்பாளர்கள் எந்த அரசு நிறுவனத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் அபுதாபி சுகாதார நிலையத்தில் நேரடியாக இறந்தவர்களின் நடைமுறைகளை முடிக்க முடியும்.
  5. அறிக்கையை நிறைவு செய்தல் மற்றும் இறந்தவரின் குடும்பத்தின் சார்பாக தேவைப்படும் அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட தேவையான நடைமுறைகளுக்கு பொறுப்பான மருத்துவர் உதவுவார்.

சனாத்கோமின் மையப்படுத்தப்பட்ட ப்ளாட்பார்ம் ஏழு அரசாங்க நிறுவனங்களை இணைக்கிறது, எனவே முழு செயல்முறையையும் எளிதாக முடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இவற்றில் அபுதாபி சுகாதாரத்துறை (DoH); அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC); அபுதாபி நீதித்துறை (ADJD); அபுதாபி ஓய்வூதிய நிதி (ADPF); அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் (SEHA); அபுதாபி விநியோக நிறுவனம் (ADDC) மற்றும் அல் அய்ன் விநியோக நிறுவனம் (AADC) ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel