ADVERTISEMENT

UAE: ஏழு எமிரேட்களிலும் புத்தாண்டு வானவேடிக்கைக்கான சிறந்த இடங்களின் முழுப் பட்டியல் இதோ….

Published: 31 Dec 2024, 12:43 PM |
Updated: 31 Dec 2024, 1:21 PM |
Posted By: Menaka

துபாய் உட்பட ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வானவேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சிகளுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக தயார் நிலையில் உள்ளது. இவற்றில் கட்டணம் மற்றும் கட்டணமில்லா இலவச பகுதிகளும் அடங்கும். 2025ஐ இலவசமாக வரவேற்க திட்டமிடும் குடியிருப்பாளர்களுக்கென ஒவ்வொரு எமிரேட்டிலும் ரசிக்க ஏராளமான வானவேடிக்கைகள், லேசர்கள் மற்றும் ட்ரோன் காட்சிகள் உள்ளன. அமீரகம் முழுவதும் இலவச பாட்டாசுக் காட்சிகளைக் கண்டுகளிக்க சிறந்த இடங்களின் பட்டியல் எமிரேட் வாரியாக பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

1. அபுதாபி

அபுதாபி கார்னிச்

8 கிமீ தொலைவிற்கு நீண்டுள்ள வாட்டர்ஃப்ரண்டானது வானவேடிக்கை காட்சிகளை நடத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது. வானில் வெடிக்கும் பாட்டசுக் காட்சிகளின் பிரதிபலிப்பு நீர்ப்பரப்பில் பிரகாசிப்பது தனித்துவமான அனுபவத்தை வழங்கும். மேலும், லூலு தீவில் உள்ள மதர் ஆஃப் தி நேஷன் ஃபெஸ்டிவல் (Mother of the Nation Festival), கார்னிச் மற்றும் மனார் அபுதாபி ஆகியவை சிறந்த பார்வை இடங்களாகும்.

யாஸ் ஐலேண்ட்

புத்தாண்டை வரவேற்க யாஸ் தீவில் இரண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்று இரவு 9 மணிக்கும் மற்றொன்று நள்ளிரவுக்கும் 2025 ஐ வரவேற்கும். யாஸ் பே வாட்டர்ஃபிரண்ட், யாஸ் மெரினா, யாஸ் பீச் மற்றும் சமலியா தீவில் உள்ள மனார் ஆகிய இடங்களில் இருந்து வானவேடிக்கை காட்சிகளை ரசிக்கலாம் .

ADVERTISEMENT

ஷேக் சையத் ஃபெஸ்டிவல்

அபுதாபி குடியிருப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்வுகளில் ஒன்றான  ஷேக் சையத் திருவிழாவில் 50 நிமிட புத்தாண்டு கொண்டாட்டத்துடன் உலகின் மிகப்பெரிய வானவேடிக்கை காட்சியை நடத்த உள்ளனர். அல் வத்பாவில் நடைபெறும் இந்த நிகழ்வானது ஆறு கின்னஸ் உலக சாதனைகளை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் 20 நிமிடங்களுக்கு மேலாக வான்வழி கலையை உருவாக்கும் 6,000-ட்ரோன் நிகழ்ச்சியும் அடங்கும்.

மாலை 6 மணிக்குத் தொடங்கும் வானவேடிக்கைகள் ஒவ்வொரு மணி நேரமும் வெடிக்கும், நள்ளிரவு இறுதியில் சாதனை படைக்கும். கொண்டாட்டங்களில் லேசர் ஷோக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அடங்கும்னென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கிற்குச் செல்ல டிக்கெட் தேவைப்படும். இருப்பினும், ​​வானவேடிக்கை, லேசர் மற்றும் ட்ரோன் காட்சிகளை நிகழ்வு மண்டலத்திற்கு வெளியே அருகிலுள்ள இடங்களில் இருந்து இலவசமாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

லிவா ஃபெஸ்டிவல்

இப்பகுதியில் உள்ள உயரமான குன்றுகளில் ஒன்றான மொரீப் டூனின் பின்னணியில் மோட்டார்ஸ்போர்ட் ஆர்வலர்கள் பட்டாசு நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவாகள். இலவச அனுபவத்தைத் தேடும் பார்வையாளர்கள் தால் மோரீப், லிவா ஃபெஸ்டிவல் மைதானம் மற்றும் லிவா வில்லேஜிலிருந்து சிறந்த காட்சிகளை அனுபவிக்க முடியும்.

அல் மரியா ஐலேண்ட்

வாணவேடிக்கை மற்றும் லேசர் ஷோவுடன் தி ப்ரோமெனேடில் (The Promenade) கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 10, 10.30, 11, மற்றும் 11.30 மணிக்கு வரிசையாக லேசர் ஷோக்கள் நடத்தப்பட்டு, நள்ளிரவு பட்டாசு வெடிப்பதற்கான கவுண்ட்டவுனில் நிகழ்ச்சி முடிவடையும். பார்வையாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு பிளாசாவிலிருந்து இலவச காட்சிகளை அனுபவிக்கலாம்.

அபுதாபியில் உள்ள பிற  இடங்கள்

பின்வரும் இடங்களுக்கும் நுழைவு இலவசம்:
• ஹஸ்ஸா பின் சையத் ஸ்டேடியம், அல் அய்ன்
• மதீனத் சையத் பொது பூங்கா, அல் தஃப்ரா
• கியாதி, அல் தஃப்ரா (டாம் சென்டர் பகுதியில் இருந்து பார்க்கலாம்)

2. துபாய்

புர்ஜ் கலிஃபா

உலகப் புகழ்பெற்ற வானுயர் கோபுரமான புர்ஜ் கலீஃபா புத்தாண்டு தினத்தன்று வானவேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இந்த ஆண்டு காட்சி, ‘பியாண்ட் ட்ரீம்ஸ்’, அசல் இசை, 200 க்கும் மேற்பட்ட அதிநவீன லைட் பீம்ஸ் மற்றும் 11 நாடுகளைச் சேர்ந்த 110 நிபுணர்களின் ஒன்பது நிமிட காட்சிப்படுத்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நள்ளிரவில் கவுண்ட்டவுனுக்கு முன், துபாய் ஃபவுண்டனின் ஒளி மற்றும் நீர் காட்சியைக் காண விரும்புபவர்கள் துபாய் மாலுக்குச் செல்லலாம். குறிப்பாக, புர்ஜ் பார்க் குடும்பத்திற்கு ஏற்ற கட்டண பார்வை விருப்பங்களை வழங்குகிறது, ஃதுபாய் பவுண்டன் பார்க்கும் பகுதி, சூக் அல் பஹார் மற்றும் ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வார்டு ஆகியவை பார்வையாளர்களுக்கு சிறந்த இலவச இடங்களாகும். சாலை மூடப்படுவதால், ஒரு நல்ல இடத்தைப் பெறுவதற்கு மாலை 5 மணிக்குள் டவுன்டவுன் துபாய்க்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அட்லாண்டிஸ், தி பாம்

அட்லாண்டிஸ் ஒரு டிக்கட் இலக்கு என்றாலும், பார்வையாளர்கள் பாம் ஜுமைரா போர்டுவாக்கில் இருந்து வானவேடிக்கைகளை இலவசமாக அனுபவிக்க முடியும்.

அல் சீஃப்

துபாயின் பாரம்பரிய மாவட்டமான அல் சீஃப், துபாய் க்ரீக்குடன், பாரம்பரிய ஈர்ப்புகள் மற்றும் கட்டிடக்கலைகளுக்கு மத்தியில் இலவச வானவேடிக்கைகளை பார்ப்பதற்கான அழகிய அமைப்பை வழங்குகிறது.

தி பீச், JBR மற்றும் புளூவாட்டர்ஸ்

துபாய் மெரினாவில் உள்ள ஜுமேரா கடற்கரை குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ள தி பீச் ஒரு வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. மேலும்,  ஜேபிஆர் அருகே புளூவாட்டர்ஸ் தீவு மூன்று நிமிட நிகழ்ச்சியை நடத்தும், இது ஜேபிஆரின் வானவேடிக்கை காட்சியில் கடற்கரையை மூழ்கடிக்கும்.

ஹத்தா

புத்தாண்டு தினத்தை அழகிய மலைத்தொடர்களுக்கு மத்தியில் கழிக்க விரும்பும் பார்வையாளர்கள், புகழ்பெற்ற ஹத்தாவில் ஹஜர் மலைகளை பின்னணியாகக் கொண்டு, வெடிக்கப்படும் வானவேடிக்கை காட்சிகளைக் காணச் செல்லலாம். இந்த நிகழ்வு ஹத்தா குளிர்கால விழா மற்றும் துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் ஆகிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.

குளோபல் வில்லேஜ்

குளோபல் வில்லேஜ் கட்டணம் செலுத்த வேண்டிய இலக்கு என்றாலும், பூங்காவைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்து நீங்கள் ஏழு வானவேடிக்கை நிகழ்ச்சிகளை இரவு 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை இலவசமாக பார்க்கலாம்.

வானவேடிக்கைக்கான பிற இடங்கள்

• துபாய் ஃபிரேம்
• துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட்
• துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி
• ஜே1 பீச் (லா மெர்)

3. ஷார்ஜா

அல் மஜாஸ் மற்றும் கோர்ஃபக்கான் கடற்கரை

ஷார்ஜா குடியிருப்பாளர்கள் எமிரேட்டில் உள்ள அல் மஜாஸ் வாட்டர்ஃபிரண்ட் அல்லது கோர்ஃபக்கான் கடற்கரையில் 10 நிமிட வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை கொண்டாடலாம்.

4. அஜ்மான்

அஜ்மான் சுற்றுலா துறையானது வானவேடிக்கைக்கு பின்வரும் இரண்டு இடங்களை அறிவித்துள்ளது:

  • அஜ்மான் கார்னிச்
  • அஜ்மான் பவுல்வார்டுக்கு எதிரே அல் ஜுர்ஃப் பகுதி

கூடுதல்  இடங்கள்:

  • பாஹி பேலஸ் அஜ்மான் ஹோட்டல்
  • அஜ்மான் ஹோட்டல்
  • ஃபேர்மான்ட் அய்மான் ஹோட்டல் (Fairmont Aiman )
  • மார்சா அஜ்மான்
  • அஜ்மான் பீச் ஹோட்டல்
  • ராடிசன் ப்ளூ ஹோட்டல் அஜ்மான்
  • கார்னர் லவுஞ்ச்
  • அஜ்மான் ஃபுட் ஃபெஸ்டிவல்

5. ராஸ் அல் கைமா

ராஸ் அல் கைமாவில் உள்ள அல் மர்ஜான் தீவுக்கும் அல் ஹம்ரா வில்லேஜுக்கும் இடையே பட்டாசு மற்றும் லேசர் ஷோ ஆகியவை நடைபெறும். RAK ஆனது பொழுதுபோக்கு, குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மற்றும் உணவு டிரக்குகளுடன் இலவச கொண்டாட்டங்களை நடத்துகிறது. இருப்பினும், அல் ஹம்ரா வில்லேஜில் பார்க்கிங் இடத்தைப் பாதுகாக்க உங்கள் வாகனத்தை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

மேலும், புத்தாண்டு வானவேடிக்கை காட்சிகளுக்காக குறிப்பிட்ட சில சாலைகளை டிசம்பர் 31ம் தேதி மாலை 4 மணி முதல் மூடுவதாக ராஸ் அல் கைமா காவல்துறை அறிவித்துள்ளது. இந்த மூடல் கோவ் ரோட்டானா பாலம், எமிரேட்ஸ் ரவுண்டானா, அல் ஹம்ரா ரவுண்டானா மற்றும் யூனியன் பாலம் ஆகியவற்றில் போக்குவரத்தை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6. உம் அல் குவைன்

அல் கோர் வாட்டர்ஃபிரன்ட்

இந்த பிரபலமான கடற்கரையோர இலக்கு புத்தாண்டை வரவேற்க இன்று நள்ளிரவில் பட்டாசு காட்சியை வழங்கும், இது 2025 ஐ வரவேற்க ஒரு நிதானமான மற்றும் பண்டிகை சூழ்நிலையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

7. ஃபுஜைரா

இந்த எமிரேட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் குடும்ப நட்பு கடற்கரை இடமான அம்ப்ரெல்லா பீச்சில் வானவேடிக்கை காட்சிகளை ரசிக்கலாம், இது நள்ளிரவில் தொடங்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel