ADVERTISEMENT

ஓமனில் டிசம்பர் 31க்கு பிறகு இந்த பேங்க் நோட்டுகள் செல்லாது..!! மத்திய வங்கி அறிவிப்பு..!!

Published: 13 Dec 2024, 7:19 PM |
Updated: 13 Dec 2024, 7:22 PM |
Posted By: Menaka

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமானில் வரவிருக்கும் டிசம்பர் 31 ம் தேதிக்கு பிறகு குறிப்பிட்ட சில பேங்க் நோட்டுகள் செல்லாது எனவும், அவை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் ஓமான் சுல்தானகத்தின் மத்திய வங்கி (CBO) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் 7 வகை பேங்க் நோட்டுகள் ஜனவரி 1 , 2025 முதல் செல்லாது எனவும், அதனை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

திரும்பப் பெறப்படும் பேங்க் நோட்டுகள்:

  • 1995 ஐந்தாவது வெளியீட்டிலிருந்து பேங்க் நோட்டுகள்
  • 2000 இன் திருத்தப்பட்ட வெளியீட்டிலிருந்து பேங்க் நோட்டுகள்
  • 2005 இன் (OMR 1) பேங்க் நோட்டு
  • 2010 இன் (OMR 20) பேங்க் நோட்டு
  • 2011 மற்றும் 2012 இன் திருத்தப்பட்ட வெளியீட்டிலிருந்து பேங்க் நோட்டுகள்
  • 2015 இன் (OMR 1) பேங்க் நோட்டு
  • 2019 இன் திருத்தப்பட்ட (OMR 50) பேங்க் நோட்டு

No Image

ADVERTISEMENT

No Image

No Image

ADVERTISEMENT

No Image

No Image

No Image

No Image

எனவே, இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கூறப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கும் என்பதால், பொதுமக்கள் நாணயங்களை மாற்றுவதற்கு வசதியாக, இந்த நாணயங்களை ஏற்று, குறிப்பிட்ட காலத்தில் ஆறாவது வெளியீட்டில் இருந்து பேங்க் நோட்டுகளை மாற்றுமாறு சுல்தானகத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் ஓமன் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஓமானில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் பொதுமக்களிடமிருந்து இந்த பேங்க் நோட்டுகளை ஏற்றுக்கொண்டு, பின்னர் அவற்றை உள்ளூர் வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 7 ம் தேதி தேசிய நாணயத்தின் சில நோட்டுகள் நிறுத்தப்படும் என மத்திய வங்கி சுற்றறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது..

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel