ADVERTISEMENT

UAE: தனியார் ஊழியர்களின் “கட்டாய மருத்துவக் காப்பீடு” குடும்பத்தினரையும் கவரேஜ் செய்யுமா? விரிவான தகவல்கள் இங்கே..!!

Published: 18 Dec 2024, 9:26 AM |
Updated: 18 Dec 2024, 9:40 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய வடக்கு எமிரேட்களில் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல், தனியார் நிறுவன முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களுக்கு ரெசிடன்ஸ் அனுமதிகளை வழங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு ஒரு முன்நிபந்தனையாக மருத்துவக் காப்பீட்டுக் கொள்கையைப் பெற வேண்டும் என்று அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிஷேசன் அமைச்சத்தால் (MoHRE) அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கான இந்த கட்டாய அடிப்படை மருத்துவக் காப்பீடு (basic medical insurance) குறித்த பல்வேறு விபரங்கள் மனிதவள அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட போதிலும், இந்த காப்பீடு தனியார் நிறுவன ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளன.

அதாவது, நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும் என்பதால், ஊழியர்களே தங்கள் குடும்ப உறுப்பினர்களை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டியிருக்கலாம். இது குறித்து காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் பேசுகையில், ஸ்பான்சர்களை சார்ந்தவர்கள் மற்றும் குடும்பத்தினரின் விசா நடைமுறையின் போது அவர்களுக்கு சுகாதாரக் காப்பீடு தேவை என்று குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இது துபாய் மற்றும் அபுதாபிக்கு ஏற்ப இருக்கும், அங்கு ஸ்பான்சர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களின் சுகாதாரக் காப்பீட்டை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், வடக்கு எமிரேட்ஸில் உள்ள ஸ்பான்சர்கள் சுகாதார காப்பீட்டு விதிமுறைகளின்படி தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதாரக் காப்பீட்டைப் பெற வேண்டும் என்றும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

ஊழியர்களின் குடும்பத்தினரை காப்பீடு கவரேஜ் செய்யுமா??

காப்பீட்டுக் கொள்கைகளின் படி, இந்தத் திட்டம் அடிப்படை ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடும் என்றாலும், ஸ்பான்சர்கள் தங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய வரையறுக்கப்பட்ட கவரேஜ் போதுமானதா என்பதை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று காப்பீடு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

இன்சூரன்ஸ் அதிகாரிகளின் கருத்துப்படி, ஆண்டுக்கு 320 திர்ஹம்ஸ் என்பது வடக்கு எமிரேட்ஸில் உள்ள ஸ்பான்சர்களின் குடும்பங்களுக்கு மிகவும் மலிவான சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இந்த விலை நிர்ணயம் அதை மிகவும் அணுகக்கூடியதாக ஆக்குவதுடன், மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் தங்களைச் சார்ந்தவர்களுக்கு அத்தியாவசிய சுகாதாரப் பாதுகாப்பைப் பெறுவதை உறுதிசெய்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

காப்பீடு கவரேஜ்

வடக்கு எமிரேட்களில் பணிபுரியும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு 320 திர்ஹம்ஸில் இருந்து அடிப்படை சுகாதார காப்பீட்டுத் திட்டம் (basic health insurance) தொடங்குகிறது என்று அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக வெளியான தகவல்களில், அடிப்படை சுகாதாரக் காப்பீட்டுத் தொகுப்பின் கீழ், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் காலம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய திட்டம் 1 முதல் 64 வயதுடைய நபர்களை உள்ளடக்கியது என்றும், இந்த வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ அறிக்கை படிவத்தை பூர்த்தி செய்து சமீபத்திய உடல்நலம் குறித்த தகவல்களை இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேக்கேஜில் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான 20 சதவீத கூட்டுக் கட்டணத்துடன் சிகிச்சை செலவுகளும் கவரேஜ் ஆகும். மேலும், காப்பீடு செய்தவர் ஒரு வருடத்திற்கு 1,000 திர்ஹம்ஸ் உடன் மருந்துகள் உட்பட ஒரு வருகைக்கு அதிகபட்சமாக 500 திர்ஹம் செலுத்துகிறார் எனில், இந்த வரம்புகளுக்கு அப்பால் இன்சூரன்ஸ் நிறுவனம் 100 சதவீத சிகிச்சை செலவுகளுக்கு ஈடுசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லாத சிறிய நடைமுறைகள் தேவைப்படும் வெளிநோயாளிகளைப் பொறுத்தவரை, இணை-பணம் (co-payment) 25 சதவீதம் ஆகும். அங்கு காப்பீடு செய்தவர் ஒரு வருகைக்கு அதிகபட்சமாக 100 திர்ஹம்ஸ் செலுத்துகிறார் எனில், ஏழு நாட்களுக்குள் அதே உடல்நிலைக்கு பின்தொடர்தல் வருகைகளுக்கு இணை கட்டணம் எதுவும் தேவையில்லை. அதே நேரத்தில், ஆண்டு வரம்பு 1,500 திர்ஹம்ஸ் உடன் மருந்துகளுக்கான இணை-கட்டணங்கள் 30 சதவிகிதமாக இருக்க வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமீரகத்தில் ஏற்கனவே அபுதாபி மற்றும் துபாயில் உள்ள தனியார் ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 1, 2025 முதல் வடக்கு எமிரேட்கள் உட்பட அமீரகம் முழுவதும் அமலுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel