துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் இப்போது துபாய் காவல்துறையின் ‘ஆன்-தி-கோ’ சேவைகளைப் பெறுவதன் மூலம் 1,500 திர்ஹம் வரை சேமிக்க முடியும் என்று நேற்று புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் துபாய் எமிரேட்டில் ஏற்படும் சிறிய விபத்துகளுக்கான காவல்துறை அறிக்கையை வாகன ஓட்டிகள் எளிதாக பெறுவதுடன் அதற்கான சேவை செலவிலும் பெரும் தொகையை சேமிக்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.
அதாவது ENOC, ADNOC மற்றும் Emarat போன்ற எரிபொருள் விநியோக நிறுவனங்களுடனான துபாய் காவல்துறையின் ஒத்துழைப்பு மூலம், குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறிய போக்குவரத்து விபத்துக்கள் முதல் தெரியாத நபர் ஏற்படுத்தும் விபத்து வரை காவல் நிலையங்களுக்கு நேரில் செல்லாமல் சேவை நிலையங்களில் விரைவாகவும் எளிதாகவும் புகாரளிக்க முடியும்.
இந்த கூட்டாண்மையின் படி, சேவை நிலையங்களில் உள்ள ஊழியர்கள், காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே சிறிய விபத்துகள் மற்றும் தெரியாத நபர் ஏற்படுத்திய விபத்துகளைப் புகாரளிக்க குடியிருப்பாளர்களுக்கு உதவுவார்கள். அவ்வாறு துபாய் முழுவதிலும் உள்ள 138 சேவை நிலையங்களில் செயல்படும் இந்த ‘ஆன்-தி-கோ’ முன்முயற்சி பல்வேறு சேவைகளை வழங்குகிறது. அவை;
- வாகன பழுதுபார்க்கும் சேவை
- அறியப்படாத விபத்து அறிக்கை
- எளிய விபத்து அறிக்கை
- போலீஸ் ஐ
- இ-க்ரைம்
- தொலைத்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் (Lost and found)
இந்த முன்முயற்சியானது, விபத்துகளுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்வதற்காக வாகன ஓட்டிகளின் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. மேலும், துபாய் காவல்துறையால் சேவை வழங்குவதற்கான நேரத்தை 24 மணி நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களாகக் குறைத்துள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் சேவை செலவை 1,927 திர்ஹம்ஸில் இருந்து 420 திர்ஹம்களாகக் குறைத்துள்ளதாகவும் ஆன்-தி-கோ குழுவின் தலைவர் கேப்டன் மஜித் பின் சயீத் அல் காபி கூறியுள்ளார்.
இந்த கூட்டு மனப்பான்மை குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான மாற்றங்களை அடைய உதவியதாகக் குறிப்பிட்ட அவர், வாடிக்கையாளர் பயணங்களை எளிமைப்படுத்துவதன் மூலமும், பாதுகாப்புத் துறையில் துபாயின் தலைமைத்துவத்தைப் பேணுவதன் மூலமும் செயல்திறனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel