ADVERTISEMENT

துபாய்: கடலில் பயணித்துக்கொண்டே புத்தாண்டு கொண்டாட்டத்தை ரசிக்க சிறப்பு சலுகையை அறிவித்துள்ள RTA….

Published: 11 Dec 2024, 2:10 PM |
Updated: 11 Dec 2024, 2:10 PM |
Posted By: Menaka

இன்னும் ஓரிரு வாரங்களில் நடப்பு ஆண்டான 2024 நிறைவடையவுள்ள நிலையில், துபாய்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் எமிரேட்டில் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டை அமீரகத்தில் கொண்டாட பல இடங்களிலும் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரசித்தவாறே துபாய் கடலில் பயணிக்கக்கூடிய வாய்ப்பை பார்வையாளர்கள் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் புத்தாண்டு கொண்டாட்டத்தை ரசிக்க டிசம்பர் 31, 2024 அன்று துபாய் ஃபெர்ரி, அப்ரா மற்றும் வாட்டர் டாக்ஸி உள்ளிட்ட கடல் போக்குவரத்து வழிகளில் சிறப்பு சலுகைகள் மற்றும் பிரத்யேக சேவைகளை அறிவித்துள்ளது. எனவே, புர்ஜ் கலீஃபா, புளூவாட்டர்ஸ், அட்லாண்டிஸ், புர்ஜ் அல் அரப் மற்றும் ஜுமேரா பீச் புத்தாண்டு கொண்டாட்ட காட்சிகளை இதில் வரும் பயணிகள் கண்டு மகிழலாம்.

அத்துடன் ஹோட்டல்கள், பாரம்பரியப் பகுதிகள் மற்றும் தி வேர்ல்ட் ஐலண்ட்ஸ் போன்ற அடையாளங்களை கொண்டிருக்கும் துபாய் கடற்கரையின் பின்னணியில் துபாய் ஃபெர்ரி, வாட்டர் டாக்ஸி மற்றும் அப்ரா ஆகியவற்றில் பயணம் செய்யலாம். இதற்காக RTA அறிவித்துள்ள பிரத்யேக சேவைகளின் நேரம் மற்றும் கட்டண விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

நேரம், கட்டணம்

துபாய் ஃபெர்ரி

  • சில்வர் கிளாஸிற்கு 350 திர்ஹம்ஸ், கோல்டு கிளாஸிற்கு 525 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. இரண்டு முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும், இரண்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச நுழைவு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நிலையங்கள் – மெரினா மால் நிலையம் (துபாய் மெரினா), அல் குபைபா நிலையம் மற்றும் புளூவாட்டர்ஸ் நிலையம்
  • நேரம் – இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை புறப்படும், அதிகாலை 1.30 மணிக்கு சேவை முடிவடையும்.

வாட்டர் டாக்ஸி 

ADVERTISEMENT
  • முழு சுற்றுக்கும் வாட்டர் டாக்ஸிக்கு 3,750 திர்ஹம் சார்ட்டர் கட்டணம்
  • நிலையம் – மெரினா மால் நிலையம் (துபாய் மெரினா)
  • நேரம் – இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை புறப்பட்டு, அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும்

அப்ரா சேவை

  • ஒரு நபருக்கு 150 திர்ஹம்ஸ் செலவாகும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதியைப் பெறலாம்.
  • நிலையம் – அல் ஜடாஃப், அல் ஃபாஹிடி, அல் குபைபா மற்றும் மெரினா மால் (துபாய் மெரினா)
  • நேரம் – இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை புறப்படும், அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel