ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், துபாய் சஃபாரி பூங்காவின் நேரம் இந்த சீசனில் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பூங்காவில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நீட்டிக்கப்பட்ட இரவு சஃபாரி நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பார்வையாளர்கள் இரவிலும் துபாய் சஃபாரி பார்க்கை அனுபவிக்க முடியும்.
இது தொடர்பாக துபாய் சஃபாரி பார்க் வெளியிட்ட தகவல்களில் வருகின்ற டிசம்பர் 13ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை இந்த நீட்டிக்கப்பட்ட நேரம் அமலில் இருக்கும் என்றும், இதற்கான டிக்கெட்டுகள் டிசம்பர் 11ம் தேதி முதல் துபாய் சஃபாரி பார்க்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நீட்டிக்கப்பட்ட நேரங்களில் வனவிலங்கு வழிகாட்டிகள் தலைமையிலான இரண்டு இரவு சஃபாரிகள் அடங்கும். பார்வையாளர்கள் 90 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் இரவு நேர நடைமுறைகளை கண்டு மகிழலாம் என்று பூங்காவின் ஆபரேட்டர் கூறியுள்ளார். மேலும், ‘ஆப்பிரிக்க தீ’ நிகழ்ச்சி மற்றும் ‘நியான் காட்சி’ உள்ளிட்ட நேரடி நிகழ்ச்சிகளையும் சஃபாரி பார்க் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் முனிசிபாலிட்டியின் பொதுப் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளின் இயக்குநர் அஹ்மத் அல் ஜரோனி கூறுகையில், தனித்துவமான இரவு சஃபாரி அறிமுகம் மூலம், இருட்டிற்குப் பிறகு வனவிலங்குகளின் உலகில் ஒரு புதிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel