குளிர்கால சீசனை முன்னிட்டு துபாய் சர்வதேச விமான நிலையம் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். அதே போல் தற்பொழுதும் இந்த உச்ச பயண நேரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) அதிகப்படியான பயணிகளின் வருகைக்கு தயாராகி வருவதால், குளிர்கால விடுமுறைக்காக துபாயில் இருந்து பயணிக்கத் திட்டமிட்டுள்ள அமீரகக் குடியிருப்பாளர்கள் தங்கள் விமான நிலைய பயணங்களை கவனமாக திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வரவிருக்கும் தொடர்ச்சியான விடுமுறைகளை முன்னிட்டு, டிசம்பர் 13 மற்றும் 31 க்கு இடையில் 5.2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் DXB வழியாக பயணம் செய்வார்கள் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். மேலும், டிசம்பர் 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஏறக்குறைய 296,000 பயணிகளுடன் விமான நிலையத்தின் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, டிசம்பர் 20 முதல் 22 வரையிலான வார இறுதி நாட்களில் கிட்டத்தட்ட 880,000 பயணிகள் விமான நிலையத்திற்கு வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சராசரியாக, இந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 274,000 பேர் DXB-க்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கலாம் என்று கணித்துள்ளனர்.
இத்தகைய கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், சுமூகமான விமான நிலைய அனுபவத்தை உறுதி செய்ய பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு, பயண விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்:
முன்கூட்டியே செக்-இன் செய்யவும்
- எமிரேட்ஸ் பயணிகள் வீட்டில் செக்-இன், ஸ்பீட் செக்-இன் மற்றும் சிட்டி செக்-இன் வசதிகளைப் பயன்படுத்தலாம்.
- பிற விமான நிறுவனங்களுக்கு, பயணிகள் புறப்படுவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக வரக்கூடாது.
லக்கேஜ்களை இருமுறை சரிபார்க்கவும்
- கையில் எடுத்துச் செல்லும் பைகளில் உலோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்களை வைக்கவும் மற்றும் திரவப் பொருட்கள், ஏரோசோல்கள் மற்றும் ஜெல்களின் மீதான விதிமுறைகளைப் பின்பற்றவும்.
- அனுமதிக்கப்பட்ட கையடக்க எலக்ட்ரானிக் சாதனங்கள், பவர் பேங்க்கள் மற்றும் உதிரி பேட்டரிகள் ஆகியவை செக்டு-இன் லக்கேஜ்களில் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் அவை கையில் எடுத்துச் செல்லும் பைகளில் வைக்கப்பட வேண்டும்.
- பயண ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்கி, இந்தத் தேவைகள் அனைத்தையும் ஒழுங்கமைக்கவும்.
- பேக்கேஜ் அலவன்சைச் சரிபார்த்துக் கொள்ளவும், அவசரங்களைத் தவிர்க்க உங்கள் விமான நிறுவனத்தின் விதிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும்.
விமான நிலைய விதிகள்
- போக்குவரத்து அதிகமுள்ள காலங்களில் டெர்மினல்களுக்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், வீட்டிலேயே குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்ள வேண்டும்.
- 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டை விரைவுபடுத்தலாம்.
இது தொடர்பாக துபாய் ஏர்போர்ட்ஸில் டெர்மினல் ஆபரேஷன்ஸின் மூத்த துணைத் தலைவர் எஸ்ஸா அல் ஷம்சி பேசிய போது, “உச்ச பயண காலங்களில் DXB-ஆனது சிறந்த அனுபவத்தை வழங்குவது எப்போதுமே ஒரு சவாலாகும், ஆனாலும் முழு ஒத்துழைப்பைச் சந்திக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “டெர்மினல் 3 இல் உள்ள குடும்ப மண்டலம் (family zone), பரிசு மற்றும் புகைப்பட வாய்ப்புகளை வழங்கும் மேஜிக் நிலையம், இசைக்குழு மற்றும் பலவற்றைக் கொண்ட தனித்துவமான செயல்திறன் கொண்ட குளிர்கால வொண்டர்லேண்டாக மாறும்” அல் ஷம்சி கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் DXB வழியாக ஒவ்வொரு பயணத்தையும் உண்மையிலேயே மறக்கமுடியாததாக ஆக்குவதுடன், பயணிகளை ஆச்சரியப்படுத்தவும் மகிழ்ச்சியாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற நெரிசலான நேரங்களிலும், DXB பயணிகள் ஒரு பண்டிகை சூழ்நிலையை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel