ADVERTISEMENT

குளோபல் வில்லேஜ்: குடும்பங்களுக்கென புதிய பாஸ் அறிமுகம்!! டிக்கெட் பேக்கேஜ் விவரங்கள் உள்ளே…

Published: 13 Dec 2024, 5:32 PM |
Updated: 13 Dec 2024, 5:32 PM |
Posted By: Menaka

துபாயின் பன்முகக் கலாச்சார இலக்கான புகழ்பெற்ற குளோபல் வில்லேஜ் பூங்காவில் ஒரு புதிய குடும்ப பாஸ் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குடும்பங்களை என்ட்ரி டிக்கெட் மற்றும் வொண்டர் பாஸ் கிரெடிட்களில் சேமிக்க அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 399 திர்ஹம்ஸ்க்கு வழங்கப்படும் ‘Family Fun Pass’ பின்வருவனவற்றை அனுபவிக்கலாம்:

  • குளோபல் வில்லேஜுக்கான 4 ‘எனி டே(Any Day)’ நுழைவுச் சீட்டுகள்
  • 400 புள்ளிகளுடன் கூடிய ஒரு வொண்டர் பாஸ் (கார்னவலில் சவாரிகள் மற்றும் விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தலாம்)
  • பிரபலமான சவாரிகளில் ஒன்றில் இலவச ஸ்பின் (‘அரேபிய நைட் பவுன்ஸ் பேலஸ்’ அல்லது ‘ஃபெஸ்டிவல் வீல்’)

இந்த டிக்கெட் பேக்கேஜை குளோபல் வில்லேஜின் மூன்று வாயில்களுக்கு அடுத்ததாக அமைந்துள்ள டிக்கெட் கவுன்டர்களில் வாங்கலாம்.

ADVERTISEMENT

நியான் அட்வென்ச்சர் பாஸ் (Neon Adventure Pass)

குளோபல் வில்லேஜில் உள்ள  Neon Galaxy X – Challenge Zone ஐ ஆராய விரும்பும் பார்வையாளர்கள் புதிய சாகச பாஸைப் பெறலாம்.

ADVERTISEMENT

79 திர்ஹம்ஸ்க்கு கிடைக்கும் இந்த பாஸில் பின்வருவன அடங்கும்:

  • ஒரு பொது நுழைவுச் சீட்டு
  • Neon Galaxy X –  சேலஞ்ச் ஸோனுக்கான(challenge zone) ஒரு நாள் அணுகல் (அதன் அனைத்து விளக்குகள் மற்றும் எதிர்கால சாகசங்களுடன்)
  • குளோபல் வில்லேஜ் பாஸ்போர்ட், 30 நாட்டு பெவிலியன்களில் ஏதேனும் ஒன்றில் ஸ்டாம்ப் பெற்றுக்கொள்ளலாம்

நியான் அட்வென்ச்சர் பாஸானது குளோபல் வில்லேஜ் வாயில்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களிலும் கிடைக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel