ADVERTISEMENT

அபுதாபியில் ‘ரெசிடென்ஸ் பார்க்கிங்’ பெர்மிட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி??

Published: 16 Dec 2024, 5:08 PM |
Updated: 16 Dec 2024, 5:13 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அபுதாபி சிட்டியில் வாகனங்களை நிறுத்தம் செய்வது துபாயை போன்றே சற்று சிரமமாக இருக்கும். அதிலும் அபுதாபி சிட்டியை பொறுத்தவரை ரெசிடென்ட் பெர்மிட் பார்க்கிங் சேவையின் காரணமாக இரவு நேரங்களில் பார்க்கிங் செய்வது கூடுதல் சிரமத்தை உண்டாக்கும்.

ADVERTISEMENT

இருந்தபோதிலும் இந்த பார்க்கிங் வசதியானது ரெசிடென்ட் பெர்மிட் உள்ள நபர்களுக்கு பார்க்கிங்கை எளிதில் செய்வதற்கு வசதியாக இருக்கும். இதன்மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள பார்க்கிங் இடங்களை நாளின் குறிப்பிட்ட நேரங்களில் குடியிருப்பாளர்கள் முன்பதிவு செய்ய முடியும். மேலும், நாளின் மற்ற நேரங்களில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி அனுமதி பெறாதவர்களும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுதாபியில் குடியிருப்பாளர்களின் பார்க்கிங் பெர்மிட் அல்லது மவாகிஃப் பார்க்கிங் பெர்மிட் (Mawaqif parking permit) என அழைக்கப்படும் இது வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் தங்கள் பகுதியில் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை பார்க்கிங் இடத்தை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மவாகிஃப் என்பது அபுதாபியின் போக்குவரத்துத் துறையால் செயல்படுத்தப்படும் பார்க்கிங் சேவையாகும். இந்த பார்க்கிங் இடங்கள் நீலக் கோடு அல்லது ‘Resident Permit Only’ மவாக்கிஃப் அடையாளத்துடன் குறிக்கப்பட்டிருக்கும். மேலும் அபார்ட்மெண்ட் மற்றும் வில்லா பகுதிகள் ஆகிய இரண்டில் வசிப்பவர்களும் இந்த பார்க்கிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், ஒரே குடியிருப்பில் வசிக்கும் முதல் அல்லது இரண்டாம் நிலை உறவினர்களும் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

மவாகிஃப் பார்க்கிங் அனுமதி பெறுவது எப்படி?

தேவையான ஆவணங்கள்

  • மின்சாரக் கட்டண ரசீது
  • எமிரேட்ஸ் ஐடி
  • குத்தகை ஒப்பந்தம் (tenancy contract)
  • வாகன உரிமை அட்டை (vehicle ownership)

செலவு

ஐக்கிய அரபு அமீரகக் குடிமக்களுக்கும், அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் குடியிருப்பாளர்களின் பார்க்கிங் அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் மாறுபடும்.

ADVERTISEMENT
  • அடுக்குமாடி குடியிருப்புகளில் நான்கு வாகனங்கள் வரை விண்ணப்பிக்கும் UAE நாட்டினருக்கு அனுமதி இலவசம்.
  • வில்லா பகுதிகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கும் அமீரகக் குடிமக்களுக்கு இது இலவசம்.
  • வெளிநாட்டவர்கள் தங்களின் முதல் வாகனத்திற்கு அனுமதி பெற 800 திர்ஹம் செலவாகும்.
  • அதுவே இரண்டாவது வாகனத்திற்கு அனுமதி பெற, 1,200 திர்ஹம் செலவாகும்.

செயல்முறை

குடியிருப்பாளர்கள் அபுதாபியின் TAMM தளம் மூலம் இந்த அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், தற்போதுள்ள அனைத்து பார்க்கிங் அபராதங்களும் செலுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பொதுவாக தலைநகரில் உள்ள அனைத்து பொது பார்க்கிங் மண்டலங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இருப்பினும், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இலவச பார்க்கிங் அளிக்கப்பட்டாலும் இத்தகைய ரெசிடென்ஸ் பார்க்கிங் இடங்களில் இரவு 9 மணிக்கு மேல் பெர்மிட் இல்லாத வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel