ADVERTISEMENT

துபாய், அபுதாபியில் புத்தாண்டை முன்னிட்டு 17 இடங்களில் சிறப்பு வானவேடிக்கைகள்.. முழுபட்டியல் உள்ளே..!!

Published: 12 Dec 2024, 5:12 PM |
Updated: 12 Dec 2024, 5:12 PM |
Posted By: Menaka

அமீரக குடியிருப்பாளர்கள் டிசம்பர் 31, 2024 அன்று இரவு வானில் பல வண்ணங்களில் ஒளிரும் வாணவேடிக்கைக் காட்சிகளுடன் உற்சாகமாக 2025ஆம் ஆண்டை வரவேற்க ஆவலுடன் தயாராகி வருகின்றனர். அமீரகத்தில் புத்தாண்டு தினத்தன்று பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் பல அற்புதமான வானவேடிக்கை காட்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெறும்.

ADVERTISEMENT

அவற்றில் முக்கியமான ஒன்று துபாயின் புர்ஜ் கலீஃபா. உலகின் மிக உயரமான கட்டிடத்தில் மயக்கும் வாணவேடிக்கை மற்றும் லேசர் காட்சியுடன் புத்தாண்டு தொடங்குவதை காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் துபாய்க்கு பயணிக்கிறார்கள். 828 மீட்டர் உயரமுள்ள கட்டிடத்தைச் சுற்றி வசிப்பவர்களும் சுற்றுலாப் பயணிகளும் கூடி, மணிக்கணக்கில் முகாமிட்டு, வாணவேடிக்கையைக் காண்பதால், அங்கு செல்வது எளிதான காரியம் அல்ல.

இருப்பினும், புர்ஜ் கலீஃபா மட்டுமின்றி துபாய் மற்றும் அபுதாபியின் பல இடங்களிலும் இந்த மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை அனுபவிக்க சிறப்பு நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தக்கூடிய பல இடங்கள் இருக்கின்றன. அவற்றின் முழுப் பட்டியலை கீழே காணலாம்.

ADVERTISEMENT

அபுதாபி

1. அபுதாபி கார்னிச்
வாணவேடிக்கைகளின் அற்புதமான காட்சி பளபளக்கும் கடலுக்கு மேல் வானை அலங்கரிப்பதைப் பார்வையாளர்கள் இங்கு ரசிக்கலாம். அபுதாபியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் செல்லும் இடம் இதுவாகும். இதனை 2023 MOTN ஃபெஸ்டிவல், லுலு ஐலேண்டில் உள்ள மனார், கார்னிச் கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து 8 கிமீ நீளமுள்ள கார்னிச்சில் நடைபெறும் காட்சியைக் காணலாம்.

ADVERTISEMENT

2. யாஸ் ஐலேண்ட்
அற்புதமான அட்வென்ச்சர் பூங்காக்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு மிகவும் பிரபலமான இந்த ஐலேண்டில் நடைபெறும் வானவேடிக்கைகளின் கண்கவர் காட்சி புத்தாண்டை உயிர்ப்பிக்கும். இந்த காட்சியை யாஸ் பே வாட்டர்ஃபிரண்ட், யாஸ் மெரினா, யாஸ் பீச் அல்லது சமலியா தீவில் உள்ள மனார் ஆகியவற்றிலிருந்தும் பார்க்கலாம்.

3. தால் மொரீப்
சாகசக்காரர்களின் பிரியமான லிவா ஃபெஸ்டிவல் (Liwa Festival) நடைபெறும் இடத்தில், அனைவரும் நள்ளிரவில் வானவேடிக்கை நிகழ்ச்சியை அனுபவிக்க முடியும். இதனை குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தால் மோரீப் குன்று (Tal Moreeb dune), லிவா ஃபெஸ்டிவல் மற்றும் லிவா வில்லேஜைச் சுற்றியுள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலிருந்தும் காணலாம்.

4. அல் ஹுதைரியாத் ஐலேண்ட்
புத்தாண்டு தினத்தன்று அல் ஹுதைரியாத் தீவில் கடற்கரை ஓரத்தில் இருந்து வானவேடிக்கை நிகழ்ச்சியை ரசிக்கலாம்.

5. ஷேக் சையத் ஃபெஸ்டிவல் (அல் வத்பா)

புத்தாண்டு தினத்தன்று அல் வத்பாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தால், கேம்பிங் வில்லேஜ், ஹெரிட்டேஜ் வில்லேஜ் அல்லது மஜ்லிஸ் பகுதியிலிருந்து வாணவேடிக்கைகளின் அற்புதமான காட்சியைக் காண முடியும்.

6. அல் மரியா ஐலேண்ட்

அபுதாபியின் சிறந்த ஹோட்டல் ஒன்றில் தங்கத் திட்டமிடுபவர்கள் அல் மரியா ஐலேண்டில்  பிரகாசமான காட்சிகளுடன் 2025ஐ வரவேற்கலாம்.

7. ஹஸ்ஸா பின் சையத் ஸ்டேடியம், அல் அய்ன்
அல் அய்ன் FC ரசிகர்களுக்கு ஹஸ்ஸா பின் சையத் ஸ்டேடியம் 2025ஐக் கொண்டாட சிறந்த இடமாக இருக்கும். அந்த இடத்தில் ஏராளமான வாகன நிறுத்துமிடம் உள்ளது. வானவேடிக்கைகளின் அற்புதமான காட்சி இரவு வானை ஒளிரச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Used for illustrative purposes only (Photo: Reuters)

8. மதீனத் சையத் பொதுப் பூங்கா
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, இயற்கையுடன் நெருக்கமாக இருக்க விரும்பினால், அல் தஃப்ராவில் உள்ள மதீனாட் சையத் பொது பூங்காவில் இருந்து வண்ணமயமான பட்டாசுகளைக் காணலாம்.

File photo used for illustrative purposes

9. முகீரா பே வாட்டர்ஃபிரண்ட், அல் மிர்ஃபா
அல் தஃப்ராவின் கரையோரத்தில் புத்தாண்டு தின கண்கவர் பட்டாசுகளையும் ரசிக்க முடியும்.

10. கியாதி

அல் தஃப்ராவின் விசித்திரமான சிறிய நகரமான இங்கு, பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் டாம் சென்டர் பகுதியில் இருந்து வானவேடிக்கைகளைப் பார்க்கலாம்.

துபாய்

1. புர்ஜ் கலீஃபா
உலகின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான புர்ஜ் கலீஃபா புத்தாண்டு கொண்டாட்டம், இந்த ஆண்டு ஒரு கண்கவர் 9 நிமிட காட்சியை வழங்கவுள்ளது.

11 நாடுகளைச் சேர்ந்த 110க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் ஒன்றிணைந்து வருவதால், 2024 ஆம் ஆண்டு முடிவடையும் போது பார்வையாளர்கள் அழகிய காட்சியை பார்க்கலாம். பார்வையாளர்கள் அசல் இசை மற்றும் 200 க்கும் மேற்பட்ட அதிநவீன ஒளிக்கற்றைகளின் காட்சிகளைப் பார்க்கலாம்.

வான்வேடிக்கைகளை தவிர, பிரமிக்க வைக்கும் லேசர் மற்றும் ஒளி காட்சி ஆகியவை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கிறது.

நிகழ்ச்சியை எப்படிப் பார்க்கலாம்?

துபாய் மாலுக்குச் சென்று, புர்ஜ் கலீஃபாவின் லேசர், ஒளி மற்றும் பட்டாசு நிகழ்ச்சியுடன் இணைந்து துபாய் ஃபவுண்டைனின் ஒளி மற்றும் நீர் நிகழ்ச்சியைப் பார்க்கவும்; அல்லது டவுன்டவுன் துபாய், சூக் அல் பஹார் அல்லது ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டில் உள்ள உணவகத்தில் இருந்து பார்க்கவும்; அல்லது குடும்பத்துடன் செல்பவர்கள் புர்ஜ் பூங்காவிற்குச் செல்லலாம்.

2. அல் சீஃப்
அல் சீஃப்பில் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய துவாரங்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட வானவேடிக்கைகளின் அற்புதமான காட்சியை நீங்கள் அனுபவிக்க முடியும்.

3. அட்லாண்டிஸ், தி பாம்
துபாயில் உள்ள அடையாளமான ஹோட்டலில் சிறப்பு நிகழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கலாம். ஹோட்டலின் பல உணவகங்களில் ஒன்றில் இருந்தோ அல்லது அருகிலுள்ள போர்டுவாக்கில் இருந்தோ இந்த நிகழ்வுகளை பார்வையாளர்கள் காணலாம்.

4. அரேபியன் கல்ஃப்
கடலில் இருந்து கொண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை ரசிக்க திட்டமிடுபவர்கள் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்து, ஒரு யாச் (yacht)-ல் இருந்து காணலாம். யாச் ஒன்றை வாடகைக்கு எடுக்கத் திட்டமிடுபவர்கள், அனைத்து சிறந்த வானவேடிக்கை வாய்ப்புப் புள்ளிகளையும் உள்ளடக்கிய தனிப்பயன் வழியைக் கேட்கலாம்.

அதே போன்று நீர்பரப்பில் இருந்தவாறு வானவேடிக்கைகளை ரசிக்க விரும்புபவர்கள்  ஒரு அப்ரா அல்லது ஃபெர்ரி ஒன்றையும் முன்பதிவு செய்யலாம். சில வழிகள் அட்லாண்டிஸ், தி பாம் மற்றும் அல் சீஃப் ஆகிய இடங்களிலும் நிறுத்தப்படுகின்றன.

5. தி பீச், ஜுமேரா பீச் ரெசிடென்ஸ்
நகரத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இங்கு, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தி பீச்சின் கரையில் வானவேடிக்கைகளின் பிரகாசமான காட்சியைக் கண்டு மகிழலாம். துபாய் மெரினா மற்றும் ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ் போன்ற பெரிய குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சிறிய தூரத்தில் இது அமைந்துள்ளது.

6. புளூவாட்டர்ஸ் ஐலேண்ட்
தி பீச்சிற்கு அடுத்தபடியாக, ப்ளூவாட்டர்ஸ் தீவில் புத்தாண்டை முன்னிட்டு வானவேடிக்கைகள் காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம் இங்கிருந்து பார்வையாளர்கள் ப்ளூவாட்டர்ஸ் தீவு மற்றும் தி பீச் ஆகிய இடங்களில் நடக்கும் வான வேடிக்கைகளை ஒரே நேரத்தில் காணலாம்.

7. குளோபல் வில்லேஜ்

புத்தாண்டு தொடங்கும் போது, ​​இந்த பன்முக கலாச்சார இடமான குளோபல் வில்லேஜூம் வானத்தை ஒளிரச் செய்யும். இரவு 8 மணி முதல் ஒவ்வொரு மணி நேரமும் வான வேடிக்கை காட்சிகள் மூலம், மற்ற நாடுகளில் 2025 தொடங்கும் நேரத்தில் இருந்து இறுதியாக அமீரகம் புத்தாண்டை துவக்கும் நேரம் வரை சிறப்பு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.

ராஸ் அல் கைமா

துபாய், அபுதாபி மட்டுமின்றி ராஸ் அல் கைமாவிலும் புத்தாண்டு தினமானது பிரம்மிக்க வைக்கும் வாணவேடிக்கைகளுடன் BM ரிசார்ட்டிற்கு அருகில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel