ADVERTISEMENT

உங்களுக்கு தெரியுமா..? UAE டிரைவிங் லைசென்ஸ் வைத்து 40க்கும் மேலான நாடுகளில் வாகனம் ஓட்டலாம்!! முழுவிபரம் உள்ளே…

Published: 4 Dec 2024, 11:03 AM |
Updated: 4 Dec 2024, 11:03 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெசிடன்ஸ் விசாவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், UAE டிரைவிங் லைசென்சை அங்கீகரிக்கும் பல நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு பயணம் செய்தால், அங்கு உங்களின் அமீரக டிரைவிங் லைசென்சை வைத்து வாகனம் ஓட்டலாம் என்பது தெரியுமா உங்களுக்கு..??

ADVERTISEMENT

ஆம்.. இதற்கென ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் ‘Markhoos’ என்ற ஒரு ஆன்லைன் சேவையைக் கொண்டுள்ளது. அந்த சேவையின் மூலம், அமீரகத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் எந்தெந்த நாடுகளில் நீங்கள் வாகனம் ஓட்ட முடியும் என்ற  பட்டியலைக் கண்டறிந்து கொள்ளலாம்.

இருப்பினும், நீங்கள் அந்தந்த நாடுகளில் விசிட் விசாவில் இருக்கும்போது மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை அந்த நாடுகளின் குடியுரிமையை நீங்கள் பெற்றால், அந்நாட்டில் வாகனம் ஓட்டுவதற்கான செயல்முறையை நீங்களும் பின்பற்ற வேண்டும். எனினும் இது நாட்டுக்கு நாடு மாறுபடலாம்.

ADVERTISEMENT

UAE ஓட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியல்

முதலாவதாக, UAE ஓட்டுநர் உரிமம் பெற்ற அமீரக குடியிருப்பாளராக நீங்கள் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் நீங்கள் எளிதாக வாகனம் ஓட்டலாம்.

இந்த நாடுகளைத் தவிர, உங்களின் UAE ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற 40க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நீங்கள் சொந்தமாக வாகனம் ஓட்ட முடியும். அந்த நாடுகளின் பட்டியலை கீழே காணலாம்.

ADVERTISEMENT

1. எஸ்டோனியா
2. அல்பேனியா
3. போர்ச்சுகல்
4. சீனா
5. ஹங்கேரி
6. கிரீஸ்
7. உக்ரைன்
8. பல்கேரியா
9. ஸ்லோவாக்கியா
10. ஸ்லோவேனியா
11. செர்பியா
12. சைப்ரஸ்
13. லாட்வியா
14. லக்சம்பர்க்
15. லிதுவேனியா
16. மால்டா
17. ஐஸ்லாந்து
18. மாண்டினீக்ரோ
19. அமெரிக்கா
20. பிரான்ஸ்
21. ஜப்பான்
22. பெல்ஜியம்
23. சுவிட்சர்லாந்து
24. ஜெர்மனி
25. இத்தாலி
26. ஸ்வீடன்
27. அயர்லாந்து
28. ஸ்பெயின்
29. நார்வே
30. நியூசிலாந்து
31. ருமேனியா
32. சிங்கப்பூர்
33. ஹாங்காங்
34. நெதர்லாந்து
35. டென்மார்க்
36. ஆஸ்திரியா
37. பின்லாந்து
38. இங்கிலாந்து
39. துருக்கி
40. கனடா
41. போலந்து
42. தென்னாப்பிரிக்கா
43. ஆஸ்திரேலியா
44. இஸ்ரேல்
45. அஜர்பைஜான் குடியரசு

பட்டியலில் இல்லாத நாட்டில் வாகனம் ஓட்ட என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் பயணம் செய்யும் நாடு பட்டியலில் இல்லை என்றால், நீங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு (IDL) விண்ணப்பிக்க வேண்டும், இது சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) என்றும் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்பட்ட சரியான உள்ளூர் ஓட்டுநர் உரிமம் உங்களிடம் இருக்க வேண்டும். UAE அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ u.ae வலைத்தளத்தின்படி, நீங்கள் பின்வரும் நிறுவனங்கள் மூலம் IDP க்கு விண்ணப்பிக்கலாம்:

• ஆட்டோமொபைல் மற்றும் டூரிங் கிளப் ஆஃப் UAE (ATCUAE)
• துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அலுவலகங்கள்
• எமிரேட்ஸ் தபால் நிலையங்கள்
• ஷேக் சையத் சாலையில் உள்ள Dnata அலுவலகம்
• ATCUAE இன் இணை உறுப்பினர்கள்
• MOI UAE ஆப்ஸ்

செலவு மற்றும் செல்லுபடியாகும் காலம்

• 170 திர்ஹம்ஸ் மற்றும் 5% மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT).
• அனுமதி ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel