ADVERTISEMENT

இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு.. ஒரு ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே அனுமதி.. விதிகளை கடுமையாக்கும் இந்தியா..!!

Published: 27 Dec 2024, 6:30 PM |
Updated: 28 Dec 2024, 8:14 AM |
Posted By: Menaka

இந்தியாவின் சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS-Bureau of Civil Aviation Security) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force-CISF) ஆகியவை இணைந்து விமான நிலைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பயணிகள் கையில் கொண்டு செல்லும் ஹேன்ட் லக்கேஜ்களுக்கு கடுமையான அளவு மற்றும் எடை கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதன் விளைவாக, சில முக்கிய இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்கள் பேக்கேஜ் கொள்கைகளை தற்போது புதுப்பித்துள்ளன. எனவே, இந்தியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் பயணிகள் புதிய ஹேன்ட் லக்கேஜ் விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஹேண்ட் பேக்கேஜ் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:

ஒரு பைக்கு (one bag rule) மட்டுமே அனுமதி:   புதிய பேக்கேஜ் கொள்கையின் படி, யணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணம் செய்பவராக இருந்தாலும், விமானத்தில் ஒரு கேபின் பையை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எடை மற்றும் அளவு கட்டுப்பாடுகள்:

  • எகானமி & பிரீமியம் எகானமி வகுப்பு: 7 கிலோ வரையிலான ஒரு பை
  • பிசினஸ் & முதல் வகுப்பு: 10 கிலோ வரையிலான ஒரு பை

அனைத்து வகுப்புகளுக்கான பரிமாணங்கள்:

  • உயரம்: 55 செமீ (21.6 அங்குலம்)
  • நீளம்: 40 செமீ (15.7 அங்குலம்)
  • அகலம்: 20 செமீ (7.8 அங்குலம்)

பழைய முன்பதிவுகளுக்கான வரம்புகள்:

மே 4, 2024க்கு முன் வாங்கிய டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகளுக்கு அதிக எடை வரம்புகள் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, எகானமி: 8 கிலோ வரை, பிரீமியம் எகானமி: 10 கிலோ வரை, பிஸினஸ்& முதல் வகுப்பு: 12 கிலோ வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேற்கூறப்பட்டுள்ள எடை வரம்புகளானது மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன் செய்யப்பட்ட மாறாத முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களின் லக்கேஜ் கொள்கைகள்:

1. ஏர் இந்தியா: எகானமி வகுப்பு பயணிகளுக்கு 7 கிலோ பையையும் பிஸினஸ் வகுப்பிற்கு 10 கிலோ பையையும் அனுமதிக்கும் ஒரு பை வரம்புக்கு அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

2. இண்டிகோ ஏர்லைன்ஸ்: அதிகபட்சம் 7 கிலோ மற்றும் 115 செ.மீ. ஒருங்கிணைந்த பரிமாணங்களில் உள்ள ஒரு கேபின் பை மற்றும் 3 கிலோ வரையிலான பர்ஸ் அல்லது லேப்டாப் பை போன்ற சிறிய தனிப்பட்ட பொருளை அனுமதிக்கிறது.

விதிகள் கடுமையாக்கப்பட்டதற்கான காரணம்

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் ஏற்படும் கடும் நெரிசல் காரணமாக, பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, கடும் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கேபின் பைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் நோக்கம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

    • போர்டிங் செயல்முறையை விரைவுபடுத்துதல்
    • பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் கால தாமதங்களைக் குறைத்தல்
    • பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கேபின் சூழலை உறுதிப்படுத்துதல்.

ஆகவே, இந்திய விமான நிலையங்களில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதுப்பிக்கப்பட்ட லக்கேஜ் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலம், அசௌகரியத்தைத் தவிர்க்கவும் இணக்கத்தை உறுதி செய்யவும் பயணிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel