உலகின் பிரபலமான மெஸ்சேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் (WhatsApp) மே 5, 2025 முதல், 15.1 ஐ விட பழைய iOS பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களில் செயல்படாது என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், iPhone 5s, iPhone 6 மற்றும் iPhone 6 Plus உள்ளிட்ட பழைய ஐபோன் மாடல்களைக் கொண்ட பயனர்கள் தங்கள் சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியாது.
வாட்ஸ்அப், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாஃப்ட்வேர்களை படிப்படியாக நிறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், புதிய ஐபோன் மாடல்களைக் கொண்ட பயனர்கள் iOS 15.1 அல்லது அதற்கு பிறகு வெளியான IOS சாஃப்ட்வேர்களை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும், அவர்கள் சமீபத்திய சாஃப்ட்வேரின் புதுப்பிப்புகளை இயக்கும் வரை வாட்ஸ்அப் பயன்பாட்டை தொடர்ந்து அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று வாட்ஸ்அப் வலியுறுத்தியது, இது மொபைல் தொழில்நுட்பத்தில் புதிய அம்சங்கள் மற்றும் புதுமைகளுடன் இணக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
“இவ்வாறு பழைய சாதனங்களுக்கான ஆதரவை நிறுத்துவது, நவீன அமைப்புகளுடன் இணக்கத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது, எனவே இது புதியவற்றை ஆதரிக்கும் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர உதவும்” என்று வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த புதிய அப்டேட்டால் ஆண்ட்ராய்டு சாஃப்ட்வேரில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் வழக்கம் போல் தங்களின் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய ஐபோன் மாடல்களைக் கொண்ட பயனர்கள் என்ன செய்வது?
நீங்கள் பழைய ஐபோன் சாதனத்தைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், மே 2025 காலக்கெடுவிற்குப் பிறகும் WhatsAppஐத் தொடர்ந்து பயன்படுத்த, நீங்கள் புதிய ஐபோன்க்கு மேம்படுத்த வேண்டும் அல்லது முடிந்தால் சமீபத்திய iOS பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும்.
வாட்ஸ்அப் அதன் இணையதளத்தில், “உங்கள் இயங்குதளத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தும் முன், உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அறிவிக்கப்பட்டு, மேம்படுத்துமாறு பலமுறை நினைவூட்டப்படும்” என்று கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel