ADVERTISEMENT

புத்தாண்டிற்கு இலவச பாரக்கிங்கை அறிவித்த துபாய்.!! பொது போக்குவரத்து சேவைகளின் கால அட்டவணையும் வெளியீடு…

Published: 27 Dec 2024, 8:09 PM |
Updated: 27 Dec 2024, 8:09 PM |
Posted By: Menaka

துபாய் முழுவதும் 2025 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புத்தாண்டு விடுமுறையன்று துபாய் குடியிருப்பாளர்கள் அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களையும் இலவசமாக அணுகலாம் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஜனவரி 1, 2025 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுமுறை நாளில் குடியிருப்பாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்தச் சலுகை பல மாடி பார்க்கிங் இடங்களுக்கு பொருந்தாது என்றும், அங்கு வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஜனவரி 2, 2025 வியாழன் அன்று எமிரேட்டில் கட்டண பார்க்கிங் மீண்டும் தொடங்கப்படும். அதேசமயம், RTA-இணைக்கப்பட்ட சேவை வழங்குநர் மையங்கள் மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் 1 ஜனவரி 2025 புதன்கிழமை அன்று புத்தாண்டு விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும் என்றும், 2 ஜனவரி 2025 வியாழன் அன்று வழக்கமான வேலை நேரம் மீண்டும் தொடங்கும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக துபாய் மெட்ரோ மற்றும் டிராம் 43 மணிநேரத்திற்கு இடைவிடாமல் இயக்கப்படும் என்றும், சுமார் 1,400 பேருந்துகளை பொதுமக்களுக்கு இலவசமாக இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரம் வெளியிட்ட அறிவிப்பின் படி, எமிரேட்டில் இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து வசதிகளின் நேர அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துபாய் மெட்ரோ சேவை நேரம்

துபாய் மெட்ரோவைப் பொறுத்தவரை, டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி இறுதி வரை அதாவது நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். அதே போல், துபாய் டிராம் டிசம்பர் 31 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொது பேருந்துகள்

அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் E100 பேருந்து வழித்தடமானது, 31 டிசம்பர் 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை இடைநிறுத்தப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் இபின் பதூதா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபிக்கு E101 வழியைப் பயன்படுத்துமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல், அல் ஜஃபிலியா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் E102 பேருந்து வழித்தடமானது, 31 டிசம்பர் 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை இடைநிறுத்தப்படும். ஆகவே, இந்தக் காலகட்டத்தில் இபின் பதுதா பேருந்து நிலையத்திலிருந்து ஷாபியா முசாஃபா வரை பயணிகள் அதே வழியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் போக்குவரத்து

2025 புத்தாண்டு விடுமுறைக்கு பின்வரும் வழித்தடங்களுக்கான கடல் போக்குவரத்து நேரங்களையும் RTA வெளியிட்டுள்ளது:

வாட்டர் டாக்ஸி வழிகள்:

  • மெரினா மால் – ப்ளூவாட்டர்ஸ் (BM3): மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
  • ஆன்- டிமாண்ட் சேவைகள்: மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை (முன்பதிவு தேவை)
  • மெரினா மால் 1 – மெரினா வாக் (BM1): மதியம் 12 மணி முதல் இரவு 11.10 மணி வரை
  • மெரினா ப்ரோமெனேட் – மெரினா மால் 1 (BM1): மதியம் 1.50 முதல் இரவு 9.45 வரை
  • மெரினா டெரஸ் – மெரினா வாக் (BM1): மதியம் 1.50 முதல் இரவு 9.50 வரை
  • முழு வழி: மாலை 3.55 மணி முதல் இரவு 9.50 மணி வரை

துபாய் ஃபெர்ரி:

  • அல் குபைபா – துபாய் வாட்டர் கேனல் (FR1): மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கு
  • துபாய் வாட்டர் கேனல் – அல் குபைபா (FR1): மதியம் 2.25 மற்றும் இரவு 7.25 மணிக்கு
  • துபாய் வாட்டர் கேனல் – புளூவாட்டர்ஸ் (FR2): மதியம் 1:50 மற்றும் மாலை 6.50 மணிக்கு
  • புளூவாட்டர்ஸ் – மெரினா மால் (FR2): மதியம் 2.55 மற்றும் இரவு 7.55 மணிக்கு
  • மெரினா மால் – புளூவாட்டர்ஸ் (FR2): மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கு
  • புளூவாட்டர்ஸ் – துபாய் வாட்டர் கேனல் (FR2): மதியம் 1.20 மற்றும் மாலை 6.20 மணிக்கு
  • மெரினா மாலில் இருந்து சுற்றுலாப் பயணங்கள்: மாலை 4.30 மணிக்கு
  • அல் குபைபா – அக்வாரியம் (ஷார்ஜா) (FR5): பிற்பகல் 3 மணி, மாலை 5 மணி, இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு
  • அக்வாரியம் (ஷார்ஜா) – அல் குபைபா (FR5): மதியம் 2 மணி, மாலை 4 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணிக்கு
  • அல் ஜடாஃப், துபாய் க்ரீக் ஹார்பர் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (TR7) ஆகிய இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணங்கள்: மாலை 4 மணி முதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை.

அப்ரா:

  • துபாய் ஓல்ட் சூக் – பனியாஸ் (CR3): காலை 11 மணி முதல் இரவு 11.50 மணி வரை
  • அல் ஃபாஹிடி – அல் சப்கா (CR4): காலை 11 மணி முதல் இரவு 11.45 மணி வரை
  • அல் ஃபாஹிடி – தேரா ஓல்ட் சூக் (CR5): காலை 11 மணி முதல் இரவு 11.45 மணி வரை
  • பனியாஸ் – அல் சீஃப் (CR6): காலை 11 மணி முதல் 12.20 மணி வரை
  • அல் சீஃப் – அல் ஃபாஹிடி – துபாய் ஓல்ட் சூக் (CR7): பிற்பகல் 3.10 முதல் இரவு 10.55 வரை
  • அல் ஜடாஃப் – துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (பிஎம்2): காலை 7.30 முதல் மாலை 4 மணி வரை
  • அல் ஜடாஃப் – துபாய் க்ரீக் துறைமுகம் (CR11): காலை 7.15 மணி முதல் மாலை 4 மணி வரை

சுற்றுலா பயணங்கள்:

  • அல் சீஃப், அல் ஃபாஹிதி மற்றும் பனியாஸ் (TR10): மாலை 4 மணி முதல் இரவு 10.15 மணி வரை
  • துபாய் வாட்டர் கேனல் மற்றும் ஷேக் சையத் மரைன் ஸ்டேஷன் (TR6): மாலை 4 மணி முதல் இரவு 10.15 மணி வரை
  • அல் வஜேஹா, அல் மராசி, பிசினஸ் பே, கோடோல்பின், ஷேக் சையத் சாலை (DC2): பிற்பகல் 03.35 முதல் இரவு 10.05 வரை
  • அல் ஜடாஃப் – துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட் (DC3): மாலை 4 மணி முதல் 1 மணி வரை
  • மெரினா மால் 1ல் சுற்றுப்பயணம் (TR8): மாலை 4 மணி முதல் இரவு 10.15 மணி வரை

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel