ADVERTISEMENT

துபாயில் இ-ஸ்கூட்டர் கட்டணங்களை செலுத்த இனி நோல் கார்டை பயன்படுத்தலாம்… RTA அறிவிப்பு..!!

Published: 25 Dec 2024, 2:15 PM |
Updated: 25 Dec 2024, 2:15 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அதன் நோல் கார்டு சேவைகளை இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான சேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது. போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக RTA மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சேவை, எமிரேட் முழுவதும் RTA அங்கீகாரம் பெற்ற வழங்குநர்களால் இயக்கப்படும் இ-ஸ்கூட்டர்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில், இதுவரை எமிரேட்டில் உள்ள மெட்ரோ, பேருந்துகள், டிராம்கள் மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நோல் கார்டு, இப்போது டாக்ஸிகள், பாம் ஜுமேராவில் உள்ள மோனோரயில் மற்றும் இ-ஸ்கூட்டர் போன்ற தனியார் சேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவை விரிவாக்கம், துபாய் உட்பட ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்துறை மற்றும் வசதியான கட்டணத் தீர்வாக Nol கார்டை உறுதிப்படுத்தி, பணமில்லா பொருளாதாரம் பற்றிய துபாயின் பரந்த பார்வையை ஆதரிப்பதாக ஆணையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து RTAவின் கார்ப்பரேட் டெக்னாலஜி சப்போர்ட் செக்டரில் ஆட்டோமேட்டட் கலெக்சன் சிஸ்டத்தின் இயக்குநர் சலாஹுதீன் அல் மர்சூக்கி கருத்து தெரிவிக்கையில், முக்கிய இடங்களில், குறிப்பாக பொதுப் போக்குவரத்து மையங்களைச் சுற்றியுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான கட்டண முறையுடன் நோல் கார்டை முதலில் ஒருங்கிணைத்ததாகவும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆபரேட்டர் ஆப்களிலும் நோல் கார்டு இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, இனி குடியிருப்பாளர்கள் நோல் கார்டைப் பயன்படுத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியும் என்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் NFC தொழில்நுட்பம் மூலம் தங்கள் நோல் கார்டை இணைப்பதன் இணைத்து, மணிநேரம், தினசரி அல்லது மாதாந்திரம் போன்ற பல்வேறு தொகுப்புகளை வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

நோல் கார்டின் பிற நன்மைகள்

எமிரேட்டில் போக்குவரத்துக்கு அப்பால், பொது பார்க்கிங், சில்லறை விற்பனை நிலையம், அருங்காட்சியகங்கள் மற்றும் கிளப்புகள் போன்ற பல்வேறு பொது வசதிகளுக்கு நுழைவதற்கும் நோல் கார்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பொதுப் போக்குவரத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில், RTA ஆனது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஏற்ப சிறப்பு Nol தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உணவு, ஷாப்பிங், பொழுதுபோக்கு, ஹோட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்கள் போன்ற துறைகளில் தள்ளுபடிகள் மற்றும் விளம்பரங்களை வழங்கும் நோல் டிராவல் பேக்கேஜ்கள் மற்றும் நோல் மாணவர் பேக்கேஜ்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.

மேம்படுத்தல்

இந்த மேம்பாடுகளுக்கு கூடுதலாக, RTA நோல் முறையை பாரம்பரிய அட்டை அடிப்படையிலான டிக்கெட்டில் இருந்து நவீன, கணக்கு அடிப்படையிலான அமைப்பாக மேம்படுத்துகிறது. இந்த புதிய அமைப்பு மின்னணு மற்றும் நிதிப் பாதுகாப்பில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறது, இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும், உருவாக்கப்படும் தரவின் திறனை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மேம்படுத்தல், பயணத் திட்டமிடல், முன்பதிவு செய்தல் மற்றும் ஸ்மார்ட் சேனல்கள் மூலம் முன்பணம் செலுத்துதல் போன்ற புதுமையான அம்சங்களை அறிமுகப்படுத்தி, துபாயின் ஸ்மார்ட் மொபிலிட்டி சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel