ADVERTISEMENT

துபாயில் முக்கிய நெடுஞ்சாலையில் நெரிசலைக் குறைக்க புதிய அணுகல் சாலை அறிமுகம்!!

Published: 26 Dec 2024, 11:43 AM |
Updated: 26 Dec 2024, 11:46 AM |
Posted By: Menaka

துபாயில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் குடியிருப்பாளர்களுக்கு  வசதியை வழங்குவதற்கும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக புதிய பாதை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் உள்ள வர்த்தக மையங்களில் ஒன்றான டிராகன் மார்ட் நோக்கி அணுகலை வழங்கும் இந்த புதிய இருவழி சாலை, எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை நகரின் முக்கிய நெடுஞ்சாலையில் நெரிசலைக் குறைக்க உதவும் என்று RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஸ் அல் கோர் சாலையில் இருந்து துபாய் இன்டர்நேஷனல் சிட்டி மற்றும் டிராகன் மார்ட் நோக்கி நுழைவாயிலை அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பாதையானது எக்ஸிட் 38 இல் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது துபாய் நகர் முழுவதுமே போக்குவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு புதிய சாலைகளையும் பாலங்களையும் RTA சமீப காலமாக தொடர்ந்து புதிதாக திறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel