ADVERTISEMENT

துபாயில் ‘பஸ்-ஆன்-டிமாண்ட்’ பேருந்து சேவைக்கான கட்டணம் குறைப்பு..!! RTA அறிவிப்பு..!!

Published: 20 Dec 2024, 8:02 PM |
Updated: 20 Dec 2024, 8:07 PM |
Posted By: Menaka

துபாயில் பொதுப் போக்குவரத்தை எளிதாக்கவும், அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி வழங்கவும் ‘பஸ்-ஆன்-டிமாண்ட்’ எனும் சிறிய அளவிலான பேருந்து சேவை, பயணிகளின் வசதிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

அதில் ஒரு பகுதியாக, எமிரேட்டில் தொழில் நிறுவனங்களின் கூடாரமாக விளங்கும் பிசினஸ் பே (Business Bay) பகுதியிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக பிசினஸ் பே பகுதியில் இந்த பேருந்து சேவைக்கான கட்டணம் தற்போது 5 திர்ஹம்ஸில் இருந்து 2 திர்ஹம்ஸாக குறைக்கப்பட்டுள்ளதாக RTA இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து RTA இன் பொது போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் அடெல் ஷக்ரி அவர்கள் பேசுகையில், RTAஆல் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கட்டணக் குறைப்பு முன்முயற்சி போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், இந்த முக்கிய பகுதியில் சுமூகமான போக்குவரத்து இயக்கத்திற்கு பங்களிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 10 பகுதிகளுக்கு பஸ் ஆன் டிமாண்ட் சேவையை விரிவுபடுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த ஷக்ரி, இந்த நெட்வொர்க்கில் 41 பேருந்துகள் சேவை செய்யும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தச் சேவையானது பொதுப் போக்குவரத்து பயனர்களிடையே பரந்த வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் பஸ் ஆன் டிமாண்ட் ஆப்

பயணிகள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்த ‘துபாய் பஸ் ஆன் டிமாண்ட்’ ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்த ஆப் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை சிறிய பொதுப் பேருந்துகளுடன் இணைக்கிறது, இதன் மூலம் பயனர்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து அவர்கள் சேருமிடத்திற்கான வழியைத் தீர்மானிக்க முடியும். மேலும், கட்டணத்தை நேரடியாக பயன்பாட்டின் மூலம் செலுத்தலாம்.

ADVERTISEMENT

இந்த பேருந்து சேவையானது முதல் மற்றும் கடைசி மைல் பயணங்களுக்கு ஒரு புதுமையான தீர்வை வழங்குகிறது, இது பயணிகளின் குடியிருப்புகள் மற்றும் அதன் அருகிலுள்ள பொது போக்குவரத்து நிலையங்களுக்கு இடையிலான இடைவெளியை வெகுவாக குறைக்கிறது என்றும் RTA இன் பொது போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் அடெல் ஷக்ரி தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel