ADVERTISEMENT

பேரீச்சம்பழத்தில் புதிய குளிர்பானத்தை அறிமுகம் செய்த சவுதி அரேபியா..!! கோலாவுக்கு மாற்றாக புதிய முயற்சி..!!

Published: 10 Dec 2024, 9:20 AM |
Updated: 10 Dec 2024, 9:22 AM |
Posted By: Menaka

பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தைச் சமாளிக்க பலரும் குளிர்பானங்களை நாடுவதுண்டு. குளிர்பானம் என்றாலே பெரும்பாலும் கொகோ-கோலா, பெப்ஸி நியாபகம் வந்து விடும். ஆனால், கோலாவின் சர்க்கரை அளவு உடல்நலத்திற்கு கவலைகளை அளிக்கிறது. எனவே, கோலாவுக்கு மாற்றான ஒரு குளிர்பானத்தை தேடுவது சிறந்தது.

ADVERTISEMENT

அந்த வகையில், சவூதி அரேபியாவில் வளர்ந்து வரும் பேரீச்சம்பழத் தொழிலை ஊக்குவிக்கும் முயற்சியில், ஒரு சவூதி நிறுவனம் ஒரு புதுமையான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ‘மிலாஃப் கோலா (milaf-cola)’ எனும் பெயரில் அறிமுகமாகியிருக்கும் இந்த பானம், சர்க்கரை சேர்க்கப்படாத கோலாவை வழங்கும் அதே வேளையில் தாகத்தையும் தணிக்கும்.

சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தின் (PIF) துணை நிறுவனமான துரத் அல்-மதீனாவின் (Thurath Al-Madina) கீழ் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவின் விவசாய அமைச்சர் இந்த புதிய மிலாஃப் கோலா குளிர்பானத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அந்நிறுவனம் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பேரீச்சம்பழம் அடிப்படையிலான தயாரிப்புகளை உள்நாட்டில் பல்வகைப்படுத்துவதையும் அதனை மிலாஃப் பிராண்ட் மூலம் ஏற்றுமதி செய்வதையும் துரத் அல்-மதீனா நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

“எதிர்காலத் திட்டங்களில் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகம் மற்றும் பனை மற்றும் பேரீச்சம்பழங்களுக்கான தேசிய மையம் ஆகியவற்றுடன் இணைந்து பேரீச்சம்பழத்தை உலகளவில் அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகளாக மேம்படுத்துவது அடங்கும்” என்று அது மேலும் கூறியது. ரியாத் பேரீச்சம்பழ விழாவில் (Riyadh Date Festival) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தயாரிப்பு சவுதி சந்தையில் அறிமுகமாக உள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து துரத் அல்-மதீனாவின் CEO அல்-கஹ்தானி பேசிய போது, சவூதி பேரீச்சம்பழங்களின் மதிப்பை உலகளவில் அதிகரிப்பதற்கும், சர்வதேச தேவையை உருவாக்குவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உயர்தர ஆரோக்கியமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும் இந்த புதிய கோலா பானம் நோக்கமாக கொண்டுள்ளதாக எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில், உள்நாட்டின் தேவைகளை விட பேரீச்சம்பழ உற்பத்தி ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன்களைத் தாண்டியுள்ளதும், 165,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி விரிவாக்கம் செய்யப்பட்டதே இந்த எழுச்சிக்குக் காரணம் என்றும் ராஜ்ஜியத்தின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel