கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பல ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் துபாயில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், குடும்ப செயல்பாடுகள், சுவையான உணவு அனுபவங்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய மூன்று இலவச கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுகள் உள்ளன. கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுகள் நடைபெறும் தேதி, இடம், மற்றும் அங்கு எப்படிச் செல்வது உள்ளிட்ட விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.
1. மதீனத் ஜுமைரா கிறிஸ்துமஸ் மார்க்கெட்
மதீனத் ஜுமேரா கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் கண்கவர் 36 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில் இருந்து உணவுக் கடைகள் மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற செயல்பாடுகள் வரை பல்வேறு அனுபவங்கள் உள்ளன. அங்கு ஒரு அப்ராவில் ஏறி, சாண்டாவுடன் நீர்வழிகளின் குறுக்கே பயணம் செய்யலாம்.
மேலும், பார்வையாளர்கள் ஷாப்பிங் செய்யும்போது, அங்குள்ள லைவ் பேண்ட் கிறிஸ்துமஸ் ட்யூன்களை இசைக்கும்.
- இடம்: சூக் மதீனத் ஜுமேரா
- நுழைவு: இலவச நுழைவு என்றாலும், சில செயல்பாடுகளுக்கு தனி கட்டணம் இருக்கலாம்.
- தேதிகள்: டிசம்பர் 6 முதல் 31 வரை
- எப்படிச் செல்வது: பொது போக்குவரத்து: முதலில் மெட்ரோவில் மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்று, பின்னர் டாக்ஸி அல்லது பேருந்தில் (8, 81, 88) பயணித்து அங்கு செல்லலாம்.
- வரையறுக்கப்பட்ட பார்க்கிங்மட்டுமே இருப்பதால், பெரும்பாலும் பொது போக்குவரத்தை தேர்வு செய்வது சிறந்தது.
2. துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலின் கிறிஸ்துமஸ் மார்க்கெட் எல்லா வயதினருக்கும் உண்மையான மாயாஜால அனுபவத்தை வழங்குகிறது. ‘Bay by Social’ இல் அமைந்துள்ள இது குடும்பத்துடன் சென்று பார்க்க சரியான இடமாகும்.
அங்கு ராட்சத மிட்டாய்கள் மற்றும் பிரகாசமான விளக்குகள் ஆகியவற்றிக்கு மத்தியில் உலாவலாம். பண்டிகைக்கான மேஜிக்கைப் பார்க்க Santa’s Grottoவைப் பார்வையிடலாம்..
- இடம்: தி பே பை சோஷியல், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்
- நுழைவு: அனுமதி இலவசம். இருப்பினும், சில செயல்பாடுகளுக்கு தனி கட்டணம் இருக்கலாம்.
- தேதிகள்: ஜனவரி 7, 2025 வரை திறந்திருக்கும்
- நேரங்கள்:
வார இறுதி நாட்கள் (வெள்ளி முதல் ஞாயிறு வரை): மதியம் 12 மணி முதல்
வார நாட்களில் (திங்கள் முதல் வியாழன் வரை): மாலை 3 மணி - எப்படிச் செல்வது? :
மெட்ரோ: எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து (8 நிமிட பயணம்).
வாட்டர் டாக்ஸி: கிரீக் லைனில் உள்ள க்ரீக் மெட்ரோ நிலையம் பயணித்து அங்கு செல்லலாம்.
3. JLT வின்டர் பெஸ்டிவல்
JLT பார்க் ஆம்பிதியேட்டரில் ஒரு வாரம் பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெறும். அங்கு விதவிதமான பிரம்மாண்ட அலங்காரங்கள் மற்றும் மின்னும் விளக்குகளால் சூழப்பட்ட மற்றும் ஏரிக்கரையை ஒளிரச் செய்யும் பிரமிக்க வைக்கும் 10 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்க்கலாம்.
- இடம்: JLT பார்க் ஆம்பிதியேட்டர்
- நுழைவு: எல்லா வயதினருக்கும் இலவச அனுமதி.
- தேதிகள்: டிசம்பர் 14 முதல் 22 வரை
- நேரம்: தினமும் மாலை 4 முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.
- எப்படி செல்வது?: மெட்ரோ: ரெட் லைனில் இருந்து ஜுமைரா லேக் டவர்ஸ் ஸ்டேஷன் செல்லலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel