ADVERTISEMENT

அமீரகத்தில் புதிய VAT ரீஃபண்ட் முறை அறிமுகம்.. இனி சுற்றுலாப்பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் போதே VAT பணத்தை திரும்பப் பெறலாம்!!

Published: 18 Dec 2024, 1:19 PM |
Updated: 18 Dec 2024, 1:22 PM |
Posted By: Menaka

வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், நாட்டில் தங்கியிருக்கும் காலத்தின் போது, இ-காமர்ஸ் தளங்களில் வாங்கும் பொருட்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) விரைவில் திரும்பப் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமீரகத்தில் சுற்றுலாப்பயணிகள் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5% நிலையான மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

ADVERTISEMENT

மேலும், இந்த வரியானது, பயணிகள் நாட்டை விட்டு வெளியேறும் போது பணமாகவோ, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டிஜிட்டல் வாலட் மூலமாகவோ அவர்களுக்குத் திருப்பித் தரப்படும். அதற்கு அவர்கள் செக்-இன் செயல்முறையை முடித்த 6 மணி நேரத்திற்குள் அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது VAT ரீஃபண்ட் உடனடியாக ரத்து செய்யப்படும். இது அவர்களுக்கு சில நேரங்களில் பதற்றம் மற்றும் சிரமத்தை கொடுக்கலாம்.

ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-காமர்ஸ் VAT ரீஃபண்ட் அமைப்பானது,   ஃபெடரல் டேக்ஸ் அத்தாரிட்டியில் (FTA) பதிவுசெய்யப்பட்ட தளங்கள் மற்றும் இ-ஸ்டோர்களில், நாட்டில் தங்கியிருக்கும் போது சுற்றுலாப் பயணிகள் செய்யும் ஆன்லைன் கொள்முதல் மீது VAT ரீஃபண்ட்களை வழங்க அனுமதிக்கும். அதிகாரசபையால் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய VAT ரீஃபண்ட் முறையானது, சுற்றுலாப் பயணிகளுக்கான செயல்முறையை, வாங்குவதிலிருந்து திரும்பப்பெறுவது வரை எளிதாக்குகிறது.

ADVERTISEMENT

அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, அமீரகத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் VAT ரீஃபண்ட் கோரிக்கைகளை பதிவுசெய்யப்பட்ட இ-காமர்ஸ் தளங்கள் மூலம் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம், பயண ஆவண விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டவுடன், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது VAT ரீஃபண்ட் செயல்முறை முடிந்து, முழு அனுபவமும் தொந்தரவு இல்லாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

FTA ஆனது, சுற்றுலாப் பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட VAT ரீஃபண்ட் ஆபரேட்டரான Planet உடன் இணைந்து இந்த முயற்சியை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுமையான தீர்வுகளைப் பின்பற்றுவதற்கான FTAவின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு பகுதியாகும் என்று இது தொடர்பாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முன்முயற்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் வரி ரீஃபண்ட் முறை (digital tax refund system) உட்பட FTA இன் முந்தைய முயற்சிகளின் வெற்றியை உருவாக்குகிறது. இது காகித அடிப்படையிலான செயல்முறைகளுக்கு மாற்றாக முழு டிஜிட்டல் நடைமுறைகளுடன், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்களை ஸ்கேன் செய்யவும், செயல்முறைகளை முடிக்கவும் மற்றும் டிஜிட்டல் இன்வாய்ஸ்களைப் பெறவும் அனுமதிக்கிறது. இவை அனைத்தும் VAT ரீஃபண்ட் பணத்தைத் எளிதாகவும் விரைவாகவும் திரும்பப்பெற அனுமதிக்கின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel