ADVERTISEMENT

UAE லாட்டரியின் முதல் டிராவில் வெற்றி பெற்ற 29,000 பேர்.. 100 மில்லியன் திர்ஹம்ஸ் யாருக்கு?

Published: 16 Dec 2024, 2:21 PM |
Updated: 16 Dec 2024, 2:23 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த டிசம்பர் 14ம் தேதி, சனிக்கிழமை மாலை நடைபெற்ற UAE லாட்டரியின் முதல் டிராவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சரியாக, 8.30 மணிக்கு யூடியூப்பில் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட டிராவைக் காண ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் நேரலையில் இணைந்த நிலையில், டயாலா மக்கி மற்றும் சாடி கலஃப் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர்.

ADVERTISEMENT

டிரா தொடங்கியவுடன், கிராவிட்டி பிக் இயந்திரம், ‘Days’ பிரிவில் இருந்து ஆறு எண்ணையும், ‘Month’ பிரிவில் இருந்து ஒன்றையும் தேர்ந்தெடுத்தது. இதற்குப் பிறகு, ஏழு லக்கி சான்ஸ் ஐடிகளையும் வெற்றிகரமாக தேர்ந்தெடுத்து வழங்கியது. அவை ஒவ்வொன்றும் 100,000 திர்ஹம்களின் உத்தரவாத பரிசுகளை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.

லக்கி சான்ஸ் வெற்றிகளைப் பொறுத்தவரை, CP6638485, CQ6766870, DU9775445, DJ8619319, DC7978145, CO6505342, CS6983220 ஆகிய 7 ஐடிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த டிராவில், ஐந்துக்கும் மேற்பட்ட எண்களை பொருத்தி நான்கு வெற்றியாளர்கள் மூன்றாவது பரிசான 100,000 திர்ஹம்ஸ் தொகையை தட்டிச் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

நான்காவது பரிசான 1,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை 211 வெற்றியாளர்களும், 28,000 பங்கேற்பாளர்கள் ஐந்தாவது பரிசான 100 திர்ஹம்ஸ் தொகையையும் முதல் டிராவில் வென்றுள்ளதாக UAE லாட்டரி அறிவித்துள்ளது. ஆனால், முதல் UAE லாட்டரியின் ஜாக்பாட் பரிசான 100 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு மற்றும் இரண்டாவது பரிசான 1 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை வெல்லும் அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைக்கவில்லை. மேலும், முதல் டிரா முடிவில், மொத்தம் 29,080 பேர் தோராயமாக 3.5 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளதாக UAE லாட்டரி அறிவித்துள்ளது.

வெற்றியாளர்கள் எப்படி அறிவிக்கப்படுகிறார்கள்?

டிராவில் ‘மாதங்கள்’ பகுதியுடன் ஒரு எண்ணையும், ‘நாட்கள்’ பகுதியுடன் பூஜ்ஜியத்திலிருந்து மூன்று எண்களுக்கு இடைப்பட்ட எண்களையும் பொருத்துபவர்கள் ஐந்தாவது பரிசான 100 திர்ஹம்ஸ் தொகையை வெல்லலாம். இவ்வாறு எத்தனை எண்கள் பொருந்துகின்றன என்பதைப் பொறுத்து, பங்கேற்பாளர்கள் 100 திர்ஹம்ஸ் முதல் 100 மில்லியன் திர்ஹம்ஸ் வரை வெல்லலாம்.

ADVERTISEMENT

அடுத்த டிரா

டிராவில் பங்கேற்க விரும்புபவர்கள், UAE லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.theuaelottery.ae இல் டிக்கெட்டுகளை வாங்கலாம். இந்த முயற்சியானது, அமீரகத்தில் முதல் மற்றும் ஒரே ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி நடவடிக்கையாகும். குறிப்பாக, 50 திர்ஹம் விலையிலான டிக்கெட்டுகளுடன், 100 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்டை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்று UAE லாட்டரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

‘லக்கி டேஸ்’ விளையாட்டைத் தவிர, அமீரகக் குடியிருப்பாளர்கள் 1 மில்லியன் திர்ஹம் வரை வெல்வதற்கான ஸ்கிராட்ச் கார்டுகளை வாங்கலாம். இந்த கார்டுகளுக்கான கட்டணங்கள் 5 திர்ஹம்ஸ்-இல் தொடங்குகின்றன, இது 50,000 திர்ஹம்ஸ் வரை வெல்லும் வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.

அதேபோல், டிராவின் 10 திர்ஹம்ஸ் கார்டுகளுக்கு 100,000 திர்ஹம்ஸ் உயர் பரிசு, 20 திர்ஹம்ஸ்க்கு 300,000 திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசு, 50 திர்ஹம் மதிப்பிலான கார்டுகள் மூலம் 1 மில்லியன் திர்ஹம்ஸ் என பங்கேற்பாளர்கள் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இதன் அடுத்த டிராவானது டிசம்பர் 28 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel