ADVERTISEMENT

அமீரகத்தில் தொடங்கிய குளிர்காலம்.. இரவில் வீசும் குளிர்ந்த காற்று.. 7°C ஆக குறைந்த வெப்பநிலை..!!

Published: 1 Dec 2024, 10:46 AM |
Updated: 1 Dec 2024, 10:49 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக குளிர்காலம் தொடங்கி விட்டதாக நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. குறிப்பாக, ராஸ் அல் கைமாவின் ஜெபல் ஜெய்ஸ் மலையில் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சரிந்துள்ளது. அதேசமயம், கடலோரப் பகுதிகளில் 22°Cக்கும் குறைவாகவும், உள் பகுதிகளில் 14 முதல் 20°C வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த வாரம் நாட்டின் ஒரு சில இடங்களில் பரவலான மழை பெயரத பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை வெப்பநிலை 5 முதல் 7 டிகிரி வரை குறைந்ததாக NCM தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமை ஓரளவு மேகமூட்டமான வானம் மற்றும் பகல் நேரத்தில் சராசரியாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் குடியிருப்பாளர்கள் இனிமையான வானிலையை அனுபவித்தனர்.

இதற்கிடையில், கடலோரப் பகுதிகளில் 24 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும், உள் பகுதிகளில் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 17 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

கடலில் சில நேரங்களில் பலத்த காற்று வீசுவதால், நிலத்தில் தூசி மற்றும் மணல் வீசக்கூடும் என்று NCM அறிக்கை மேலும் கூறியுள்ளது. அரேபிய வளைகுடாவில் கடல் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் சில சமயங்களில் ஓரளவு கொந்தளிப்பாகவும் இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கியதை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து வெளிப்புற சுற்றுலா தளங்களும், குளோபல் வில்லேஜ், அபுதாபி ஷேக் சையத் ஃபெஸ்டிவல் உள்ளிட்ட முக்கிய ஈர்ப்புகளும் பார்வையாளர்களுக்காக தங்களின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel