ADVERTISEMENT

அமீரகத்தில் பொதுமன்னிப்பு முடிந்தவுடன் தீவிர தேடுதல் வேட்டை ஆரம்பம்.. அதிகாரிகள் கடும் எச்சரிக்கை..!!

Published: 17 Dec 2024, 7:20 PM |
Updated: 17 Dec 2024, 7:20 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட பொதுமன்னிப்புத் திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில், திட்டம் முடிவடைவதற்கு முன் காலாவதியான விசாவுடன் தங்கியிருக்கும் சட்டவிரோதக் குடியிருப்பாளர்கள் அனைவரும் திட்டத்தைப் பயன்படுத்தி பயனடையுமாறு குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) உயர் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

முதலில் அக்டோபர் 31, 2024 அன்று காலாவதியாக இருந்த அமீரகத்தின் விசா பொதுமன்னிப்புத் திட்டம், பின்னர்  நாட்டில் அதிக காலம் தங்கியிருப்பவர்கள் தங்கள் நிலையை முறைப்படுத்த அல்லது தண்டனை அல்லது அபராதம் இல்லாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு கூடுதல் நேரத்தை வழங்குவதற்காக டிசம்பர் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், விசா பொதுமன்னிப்பு காலம் முடிந்த பிறகு நாட்டில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, மீதமுள்ள நாட்களைப் பயன்படுத்தி விசா நிலையை சரிசெய்யுமாறும் GDRFA இன் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி அவர்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

விழிப்புணர்வை பரப்புதல்

அமீரகத்தில் பொது மன்னிப்பைப் பெற்ற பலர் வேலைகளைப் பெற்றுள்ளனர் மற்றும் இப்போது வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று கூறிய அல் மரி, பொது மன்னிப்பு திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு சமூகம் தழுவிய ஆதரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இருப்பினும், இந்த முயற்சியை தொடர்ந்து புறக்கணிக்கும் நபர்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். அத்துடன்  “பொதுமன்னிப்பு உண்மையா என்று கேட்கும் நபர்கள் இன்னும் எனது அலுவலகத்திற்கு வருகிறார்கள். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று எடுத்துரைத்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு

இதற்கிடையில், இந்த முயற்சியால் பயனடைந்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் கதைகளையும் அல் மர்ரி பகிர்ந்து கொண்டார். பாஸ்போர்ட் இல்லாத நபர்களை அந்தந்த தூதரகங்களுடன் இணைத்தது, தந்தையை அறியாத, தாய்மார்களால் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விசா இல்லை, ஆனால் துபாய் ஹெல்த் அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கியது என பொதுமன்னிப்பின் மனிதாபிமான அம்சத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, பொது மன்னிப்பு செய்தியை பிரச்சாரம் செய்ய சமூகங்களை வலியுறுத்திய அல் மரி, “மற்றவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குவது எங்கள் கடமை. இந்த பொதுமன்னிப்பைப் பெறாத மக்கள் எதிர்காலத்தில் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டுவார்கள். இந்த முயற்சி முடிவுக்கு வர இன்னும் 15 நாட்கள் உள்ளன. வாருங்கள், உங்கள் நிலையை முறைப்படுத்தி, அபராதங்களை நீக்கிவிட்டு, புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள்” என்று அறிவுரையையும் அவர் வழங்கியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel