அமீரகக் குடியிருப்பாளர்கள் அனைவரும் 2025-ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆவலுடன் தயாராகி வருகின்ற அதேவேளையில், துபாயானது நகரம் முழுவதும் 45 க்கும் மேற்பட்ட இடங்களில் வானவேடிக்கை காட்சிகளுடன் இரவு வானத்தை ஒளிரச் செய்ய தயாராகி வருகிறது.
இதற்கிடையில், பாதுகாப்புத் தொழில் ஒழுங்குமுறை நிறுவனம் (Security Industry Regulatory Agency -SIRA) 36 சின்னச் சின்ன இடங்களில் நடைபெறும் இந்த கண்கவர் நிகழ்வுகளின் பாதுகாப்பையும் சுமூகமாகச் செயல்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான விரிவான திட்டங்களை அறிவித்துள்ளது.
துபாய்வாசிகள் மற்றும் சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் மறக்கமுடியாத புத்தாண்டு கொண்டாட்டத்தை வழங்கும் SIRA இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பான கொண்டாட்டங்களுக்கான கூட்டு முயற்சிகள்
இந்த வானவேடிக்கைக் காட்சிகளின் வெற்றியானது பல்வேறு பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் கூட்டாளிகளின் கூட்டு முயற்சிகளில் உள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை உறுதி செய்வதில் இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கியத்துவத்தை SIRA வலியுறுத்துகிறது. கொண்டாட்டங்களின் போது பொதுப் பாதுகாப்பு மற்றும் வசதியைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளன என்பதை இந்த ஒத்துழைப்பு உத்தரவாதம் செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
துபாயில் வானவேடிக்கை நடைபெறும் அனைத்து இடங்களிலும் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை பராமரிக்க SIRA உறுதிபூண்டுள்ளது. அனைவரின் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த, பொதுமக்கள் பின்வரும் அத்தியாவசிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:
- பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும்: பாதுகாப்பான மற்றும் மென்மையான அனுபவத்தை உறுதிசெய்ய, பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் அறிவுறுத்தல்களைக் கேட்டு அதன்படி நடக்கவும்.
- தடைசெய்யப்பட்ட பகுதிகளைத் தவிர்க்கவும்: பட்டாசு வெடிக்கும் இடங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள பகுதிகள் உட்பட தடைசெய்யப்பட்ட பகுதிகளை அணுகவோ அல்லது நுழையவோ கூடாது.
- பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்: அபாயங்களைக் குறைக்க, நியமிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலங்களில் இருக்கவும், வானவேடிக்கை காட்சிகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவும்.
துபாய் நகரின் மிகவும் பிரபலமான சில சுற்றுலா தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக மையங்கள் உட்பட 36 இடங்களில் 45 வானவேடிக்கை நிகழ்ச்சிகளை துபாய் நடத்த உள்ளது. இந்த கண்கவர் வானவேடிக்கை காட்சிகள் உலகம் முழுவதிலுமிருந்து வருகை தரும் பலதரப்பட்ட பார்வையாளர்களை பூர்த்தி செய்யும் மற்றும் அனைவருக்கும் ஒரு பண்டிகை சூழ்நிலையை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த இடங்களில் வானவேடிக்கை காட்சிகளை பிடிக்கலாம் என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்.
துபாயில் வானவேடிக்கைகள் நடைபெறும் முக்கிய இடங்கள்
- புர்ஜ் கலிஃபா
- துபாய் ஃப்ரேம்
- எக்ஸ்போ சிட்டி
- ஜுமேரா பீச் ஹோட்டல் (ஜுமைரா குழுமம்)
- துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட்
- துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி
- ப்ளூ வாட்டர்ஸ் (JBR, தி பீச்)
- அல் சீஃப்
- குளோபல் வில்லேஜ்
- துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ்
- ஹத்தா
- ஜே1 பீச் – லா மெர் (J1 Beach — La Mer)
- பாப் அல் ஷம்ஸ் டெசர்ட் ரிசார்ட் (Bab Al Shams Desert Resort)
- அல் மர்மூம் ஒயாசிஸ் (Al Marmoom Oasis)
- அட்லாண்டிஸ் ராயல் ஹோட்டல்
- அரேபியன் ராஞ்சஸ் கோல்ஃப் கிளப்
- நஷாமா டவுன் ஸ்கொயர் (Nshama Town Square)
- டாப் கோல்ஃப் துபாய் (Top Golf Dubai)
- லே ராயல் மெரிடீன் பீச் ரிசார்ட் & ஸ்பா (Le Royal Meridien Beach Resort & Spa)
- சோஃபிடெல் துபாய் தி பாம் (Sofitel Dubai The Palm)
- பார்க் ஹயாத் துபாய் (Park Hyatt Dubai)
- ஒன் & ஒன்லி ராயல் மிராஜ்
- ஒன் & ஒன்லி தி பாம் (One & Only The Palm)
- ஃபோர் சீசன்ஸ் ரிசார்ட் – ஜுமேரா பீச்
- ஃபைவ் பாம் ஜுமேரா (Five Palm Jumeirah)
- பல்கேரி ரிசார்ட் & ரெசிடேன்செஸ் (Bulgari Resort & Residences)
- அட்ரெஸ் மோன்ட்கோமேரி துபாய் (Address Montgomerie Dubai)
- ஜேஏ பீச் ஹோட்டல் – ஜெபல் அலி (JA Beach Hotel — Jebel Ali)
- பலாஸ்ஸோ வெர்சேஸ் (Palazzo Versace)
- டெர்ரா சோலிஸ் (Terra Solis)
- ப்ளூ ஒயாசிஸ் ரிசார்ட்
- நிக்கி பீச் ரிசார்ட் & ஸ்பா (Nikki Beach Resort & Spa)
- ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ்
- எமிரேட்ஸ் கோல்ஃப் கிளப்
- வோகோ மொனாக்கோ ஹோட்டல் – வேர்ல்டு ஐலேண்ட் (Voco Monaco Hotel — World Islands)
- சைஃப் – துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel