ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் அய்னில் ஒரு முக்கிய சாலையின் ஒரு பகுதி 6 மாதங்களுக்கு மூடப்படும் என்று எமிரேட்டின் போக்குவரத்து ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அதன் படி, அல் அய்னில் உள்ள ஹஸ்ஸா பின் சுல்தான் ஸ்ட்ரீட் தற்காலிகமாக மூடப்படும் என்று AD மொபிலிட்டி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரசபை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூலை 17, வியாழன் வரை சாலை மூடல் அமலில் இருக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் போக்குவரத்து தற்காலிக சாலைக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் பகுதியைக் கண்டறிய கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்:
இதற்கிடையில், சீரற்ற வானிலையின் போது, வாகனத்தின் வேகத்தைக் குறைக்குமாறும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை பராமரிக்குமாறும் வாகன ஓட்டிகளை AD mobility, கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள் Link: Khaleej Tamil Whatsapp Channel