ADVERTISEMENT

UAE: ஹேண்ட் பேக்கேஜிற்கான எடையை அதிகரித்துள்ள ஏர் அரேபியா விமான நிறுவனம்.. பயணிகள் மகிழ்ச்சி..!!

Published: 17 Jan 2025, 4:42 PM |
Updated: 17 Jan 2025, 5:33 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் பட்ஜெட் விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் அரேபியா விமான நிறுவனம், கடந்த திங்களன்று பயணிகள் இப்போது 10 கிலோ எடை வரையிலான ஹேன்ட் லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான விமான நிறுவனங்கள் ஒரு பயணிக்கு ஹேண்ட் பேக்கேஜ் எடைக்கான திறனை 7 கிலோவாகக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், ஏர் அரேபியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்யும் என்று கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “கேபின் சாமான்களுக்கு (cabin or hand baggage) அனுமதிக்கப்பட்ட மொத்த எடை 10 கிலோ ஆகும். இதில் கேரி-ஆன் பைகள், தனிப்பட்ட பைகள் (personal bag) மற்றும் டூட்டி ஃப்ரீ (duty free) பொருட்கள் ஆகியவை அடங்கும்,” என்று விமான நிறுவனம் அதன் இணையதளத்தில் விளக்கமளித்துள்ளது.

அதே போல் கேரி-ஆன் பையின் அதிகபட்ச பரிமாணங்கள் கைப்பிடிகள் (handles), பாக்கெட்டுகள் மற்றும் சக்கரங்கள் (wheel) உட்பட அனைத்தையும் சேர்த்த அளவானது அதிகபட்சமாக 55cm x 40cm x 20cm ஆக இருக்க வேண்டும் என்றும் தனிப்பட்ட பையின் (personal item) பரிமாணங்கள் அதிகபட்சமாக 25cm x 33cm x 20cm ஆக இருக்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், கைக்குழந்தையுடன் பயணிக்கும் பயணிகள், குழந்தைக்குத் தேவைப்படும் பொருட்களுக்கு 3 கிலோ வரை எடையுள்ள ஒரு கூடுதல் நிலையான அளவிலான கை லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், செக்-இன் கவுண்டரில் கூடுதல் பையை அறிவிக்க வேண்டும் என்றும் தனிப்பட்ட லக்கேஜில் டேக் இணைக்கப்பட வேண்டும் என்றும் விமான நிறுவனம் விளக்கியுள்ளது.

ஷார்ஜாவில் இருந்து புறப்படும் ஏர் அரேபியாவின் அனைத்து விமானங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்றும், அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் ஏறும் பயணிகள் இந்திய சட்டப்படி ஹேண்ட் லக்கேஜிற்கு ஒரு பை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து கேபின் லக்கேஜ்களும், ட்யூட்டி-ஃப்ரீ பர்ச்சேஸ்கள் உட்பட அனைத்தும், போர்டிங் கேட்டில் எடை, பரிமாணங்கள் மற்றும் லக்கேஜ்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்குகிறதா என சோதிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்திய விமான நிறுவனம், கேபின் பேக்கேஜ் வரம்புகளை மீறினால், ஒரு கிலோவிற்கு 100 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு சமமான கட்டணம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

பயணிகள் எடுத்துச் செல்லக்கூடிய தனிப்பட்ட பொருட்களுக்கு விமான நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

  • 1 தனிப்பட்ட பை அனுமதிக்கப்படுகிறது
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய தனிப்பட்ட பைகளானது மடிக்கணினி பைகள், பெண்களின் கைப்பைகள் அல்லது சாட்செல்கள் (தோள்பட்டை பை)
  • தனிப்பட்ட பொருளின் அதிகபட்ச பரிமாணங்கள்: 25cm x 33cm x 20cm.
  • இது உங்கள் முன் இருக்கைக்கு கீழே பொருந்த வேண்டும்.
  • செக்-இன் கவுண்டர்களில் தனிப்பட்ட பைகள் (personal bag) அறிவிக்கப்பட வேண்டும், மேலும் ஒவ்வொரு பைக்கும்  டேக் இணைக்கப்பட வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel