துபாயில் உள்ள துபாய் கிரீக்கின் இரு கரையை இணைக்கும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பான அல் மக்தூம் பாலத்தில் குறிப்பிடத்தக்க பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் போக்குவரத்துக்கு அல் மக்தூம் பாலம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி பாலத்தின் முக்கிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால், ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்படும் என்றும், இருப்பினும் குறிப்பிட்ட காலங்களில் பராமரிப்புக்காக பாலம் மூடப்படும் என்றும் கூறியுள்ளது.
மூடல் நேரம்
RTA வெளியிட்ட அறிக்கையின் படி, அல் மக்தூம் பாலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை மூடப்படும் என்றும் அதேபோல், வியாழக்கிழமைகளில், வழக்கமான பராமரிப்புக்காக அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிம்மதிப் பெருமூச்சு விடும் பயணிகள்
முக்கிய பாலம் மீண்டும் திறக்கப்படுவது பயணிகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கிறது என்றும், ஏனெனில் இது தேராவுக்கும் பர் துபாயுக்கும் இடையிலான பகுதிகளில் வழக்கமான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இதன் காரணமாக தினசரி இந்த பாலம் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூடப்படுவதற்கு வழிவகுத்தது, அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரம் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel