ADVERTISEMENT

ஓமானில் செயல்பாடுகளை நிறுத்தம் செய்யும் அமீரகத்தின் முக்கிய விற்பனை நிறுவனமான ‘carrefour’.. அறிவிப்பு வெளியீடு!!

Published: 8 Jan 2025, 2:30 PM |
Updated: 8 Jan 2025, 2:32 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக சில்லறை விற்பனை சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ‘Carrefour’ ஜனவரி 7 முதல் ஓமானில் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கேரிஃபோர் ஓமானில் செயல்படுவதற்கான பிரத்யேக உரிமையை மஜித் அல் ஃபுத்தைம் வைத்திருந்த நிலையில், ஜனவரி 7, 2025 முதல், ஓமானில் அதிகாரப்பூர்வமாக செயல்படுவதை நிறுத்தியதாக அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நீண்டகால ஆதரவிற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல தசாப்தங்களாக உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறோம். இந்த முடிவு ஏற்படுத்திய ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக, நவம்பர் 5, 2024 அன்று ஜோர்டானில் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக கேரிஃபோர் அறிவித்தது. அதையடுத்து, இப்போது அதேபோன்ற முடிவை நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT