துபாயில் தற்போது நடைபெற்று வரும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக பல்வேறு கார்களை காட்சிப்படுத்தும் கார் ஷோ நடந்து கொண்டிருக்கின்றது. துபாய் ஹில்ஸ் மாலுக்கு வரும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அங்கு நடைபெறும் துபாய் ஹில்ஸ் மால் கார் ஷோகேஸில் பிரத்யேக மண்டலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 90 க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆராயலாம்.
ஜனவரி 1 முதல் 12 வரை நடைபெறும் இந்த நிகழ்வு, குடும்பங்களுக்கு வேடிக்கை மற்றும் உற்சாகத்தை அளிக்கும் அதே வேளையில் கார் ஆர்வலர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஷோகேஸில் காலத்தால் அழியாத கிளாசிக் மாடல் கார் முதல் நவீன மாடல்கள் வரை அனைத்தையும் பார்க்கலாம், இது பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF) ஆட்டோ சீசனின் முதல் பதிப்பின் ஒரு பகுதியாக உள்ள இந்த நிகழ்வு, ஜனவரி 12 ஆம் தேதி வரை பல அற்புதமான நிகழ்வுகளை வழங்குகிறது, இதன் முக்கிய சிறப்பம்சமாக Circuit De Meydan x DSF Auto Season உள்ளது, இது ஜனவரி 3 முதல் 5 வரை நடைபெறும். கூடுதலாக, 700 க்கும் மேற்பட்ட வாகனங்களைக் காண்பிக்கும் மிர்திஃப் மோட்டார் ஷோ ஜனவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும், இது துபாய் ஆட்டோட்ரோமில் Michelin 24H Dubai endurance பந்தயத்தில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
துபாய் ஹில்ஸ் மால் கார் ஷோகேஸில், பார்வையாளர்கள் பின்வரும் பல தனித்துவமான வாகன மண்டலங்களை ஆராயலாம்.
கிளாசிக் கார்கள்
கிளாசிக் கார்கள் மண்டலத்தில் விண்டேஜ் ஆட்டோமொபைல்களின் தேர்வை பார்வையாளர்கள் காணலாம். இந்த வாகனங்களின் வடிவமைப்புகள் கடந்த காலத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
ஸ்போர்ட்ஸ் கார்கள்
இந்த மண்டலத்தில் த்ரில் தேடும் ஓட்டுநர்களுக்காக உருவாக்கப்பட்ட உயர் செயல்திறன் இயந்திரங்களின் தொகுப்பை பார்வையாளர்கள் ரசிக்கலாம். பந்தயக் கார்கள் அவற்றின் நேர்த்தியான வடிவமைப்புகள் மற்றும் சக்திவாய்ந்த என்ஜின்களுடன் இருக்கும். இந்தப் பகுதியில் சமீபத்திய மாடல்கள் மட்டும் இல்லாமல், ஸ்போர்ட்ஸ் கார்களின் உலகத்தை வடிவமைத்திருக்கும் சின்னச் சின்ன கிளாசிக்களும் அடங்கும்.
டிரீம் கார்கள்
ட்ரீம் கார்கள் மண்டலம், பிரமிக்க வைக்கும் வடிவமைப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்ட மிக ஆடம்பரமான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களைக் காட்டுகிறது. நேர்த்தியான லம்போர்கினிகள் முதல் ஃபெராரிஸின் காலத்தால் அழியாத நேர்த்தியுடன் ட்ரீம் கார்கள் பகுதி கண்கவர் மண்டலமாக இருக்கும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel