ADVERTISEMENT

‘DSF Final Sale’: 3 நாள் நிகழ்வில் 2,000 கடைகளில் 90% தள்ளுபடியைப் பெற வாய்ப்பு..!!

Published: 30 Jan 2025, 5:28 PM |
Updated: 30 Jan 2025, 5:28 PM |
Posted By: Menaka

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 30 வது பதிப்பு குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது ‘DSF Final Sale’ ஷாப்பிங் ஆர்வலர்களை உற்சாகமூட்டத் திரும்பியுள்ளது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறவிருக்கும் இந்த விற்பனை, ஷாப்பிங் பிரியர்களுக்கு இந்த சீசனின் சிறந்த ப்ரொமோஷன்களை வெல்லும் வாய்ப்பை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

துபாய் ஃபெஸ்டிவல் அண்ட் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE) ஏற்பாடு செய்த இந்த ஷாப்பிங் நிகழ்வு முடிவடைவதற்கு முன்பு மக்கள் சிறந்த ஆஃபர்களை பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஷாப்பிங் பிரியர்கள் இந்த நாட்களில் நகரம் முழுவதும் 2,000 கடைகளில் 500 உயர்மட்ட பிராண்டுகளில் 90% தள்ளுபடியைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DFREயின் படி, ஃபர்னிச்சர்கள் முதல் தொழில்நுட்ப கேஜெட் வரை, அனைத்தையும் நம்பமுடியாத தள்ளுபடி விலையில் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இவை தவிர,  பணம், கார்கள் மற்றும் தங்கம் போன்ற பெரிய பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கும்  ராஃபிள் டிராக்களும் DSFஇல் இடம்பெறுகிறது. எனவே, ஷாப்பிங் ஆர்வலர்கள் பாரிய சேமிப்பை அனுபவிக்க சரியான வாய்ப்பாக இது இருக்கும் என்று கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel