ADVERTISEMENT

துபாயின் பிரபலமான ஃபவுண்டைன் ஷோ: காட்சி நேரம், கட்டண அனுபவங்கள் உள்ளிட்ட விபரங்கள் இங்கே…

Published: 12 Jan 2025, 6:50 PM |
Updated: 12 Jan 2025, 6:50 PM |
Posted By: Menaka

துபாயில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் ஈர்க்கும் உலகப் புகழ்பெற்ற துபாய் ஃபவுன்டைன் நகரத்தின் மற்றொரு பெருமையாக தனிச்சிறப்பாக மாறியுள்ளது. தனித்துவமான இந்த அனுபவத்தை உறுதியளிக்கும் நீரூற்று 2009 ஆம் ஆண்டு முதல், பார்வையாளர்களுக்காக உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் பின்னணியில் விளக்குகள் மற்றும் இசையுடன் கச்சிதமாக இணைந்து நடனமாடுவதைக் காண்பதற்கு ஆவலுடன் ஏரளாமான பார்வையாளர்கள் வருவதுண்டு.

ADVERTISEMENT

உலகின் மிகப்பெரிய நடன நீரூற்று அமைப்பான துபாய் ஃபவுன்டைன், மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் முதல் பிரபலமான கே-பாப் டிராக்குகள் மற்றும் பேபி ஷார்க் போன்ற நர்சரி பாடல்கள் வரை பல ஆண்டுகளாக பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளது.

துபாய் நீரூற்றின் சிறப்பு

சுமார் 22,000 கேலன் தண்ணீர் 140 மீ உயரத்திற்கு காற்றில் வீசும் காட்சியைப் பார்க்கும் அனுபவம்  சிறந்ததாக இருக்கும். இது சாதாரண நீரூற்றைப் போல கிடையாது. ஒவ்வொரு நீரூற்றும் அதை செய்ய முடியாது. மேலும் கூட்டத்தை அதிர வைக்க பிரபலமான இசை பயன்படுத்தப்படுகிறது. மொத்தத்தில், பலர் அனுபவிக்கும் சிறப்பான அனுபவம் இது.

ADVERTISEMENT

எனவே, துபாயைச் சுற்றிப்பார்க்க வந்தாலோ, அல்லது குடியிருப்பாளராக இருந்தாலோ, நீங்கள் துபாயில் இருக்கும் போது உலகின் மிக உயரமான இந்த நீரூற்றுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், இலவச காட்சி நேரங்கள், சிறந்த பார்வை இடங்கள், டிக்கெட் விருப்பங்கள் உட்பட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

துபாய் ஃபவுண்டன் ஷோ நேரம்

துபாய் ஃபவுன்டைன் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் நடனமாடுகிறது. புனித ரமலான் மாதத்தில் சென்றால், எமார் அல்லது துபாய் மால் ஊழியர்களிடம் மணிநேரத்தை முதலில் சரிபார்ப்பது நல்லது. வழக்கமாக, புனித மாதத்தில் இரவு 7.30 மணிக்குப் பிறகுதான் நிகழ்ச்சி தொடங்கும்.

ADVERTISEMENT

இலவசமாக பார்க்க முடியுமா?

துபாய் ஃபவுன்டைன் நிகழ்ச்சியை யார் வேண்டுமானாலும் இலவசமாக பார்க்கலாம். துபாய் மால் மூலம் இதை எளிதாக அணுகலாம். மாலில் இருந்து வெளியேறி புர்ஜ் ஏரிக்குள் சென்றால், குறிப்பிட்ட நேரத்தில் அது நடனமாடுவதைக் காணலாம்.

துபாய் மாலில் உள்ள சில இடங்கள் மற்றும் உணவகங்கள், குறிப்பாக மொட்டை மாடியில் உள்ளவை, ஃபவுன்டைன் காட்சிகளை வழங்குகின்றன. அதேசமயம், நீங்கள் நிகழ்ச்சியை நெருக்கமாகவும் முதன்மையான பார்வை இடங்களிலும் பார்க்க விரும்பினால், நீங்கள் முன்பதிவு செய்யக்கூடிய கட்டண அனுபவங்களும் உள்ளன.

நீரூற்றைச் சுற்றியுள்ள தண்டவாளங்களில், முன் வரிசையில் இருப்பது எப்போதும் சிறந்த வழங்கும். சிறந்த இடத்தைப் பெறுவதற்கான ஒரு உறுதியான வழி, சலுகையில் சில கட்டண அனுபவங்களை முன்பதிவு செய்வதாகும்.

டிக்கெட் அனுபவங்கள்

நிகழ்ச்சியைப் பார்ப்பது இலவசம், ஆனால் அதை கூடுதல் சிறப்புடையதாக மாற்ற விரும்புபவர்கள் முன்பதிவு செய்யக்கூடிய இரண்டு அனுபவங்கள் உள்ளன.

1. துபாய் நீரூற்று படகு சவாரி: புர்ஜ் கலீஃபாவிற்கு முன்னால் உள்ள புர்ஜ் ஏரியில் ஒரு அப்ராவில் ஏறி, துபாய் நீரூற்று நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில், ஏரியில் மிதந்தவாறே அதைக் காண முடியும்.

  • டிக்கெட் விலை: ஒரு நபருக்கு 68.25 திர்ஹம்ஸ் / மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசம்.
  • செயல்படும் நேரம்: ஒவ்வொரு நாளும் மாலை 5.45 முதல் இரவு 10.45 வரை
  • துபாய் நீரூற்று படகு சவாரி எவ்வளவு நேரம்? இது சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.

2. துபாய் ஃபவுண்டன் போர்டுவாக்: இந்த அனுபவத்தின் மூலம், செல்ஃபி குச்சிகள் மற்றும் மக்களின் முதுகுகள் என கூட்ட நெரிசல் உங்கள் பார்வையைத் தடுப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மிதக்கும் போர்டுவாக்கில் உலாவும், கூட்டத்திலிருந்து விலகி நடனமாடும் நீரூற்றைப் பார்க்கலாம்.

  • டிக்கெட் விலை: ஒரு நபருக்கு 20 திர்ஹம்ஸ்
  • செயல்படும் நேரம்: ஒவ்வொரு நாளும் மாலை 5.45 முதல் இரவு 10.45 வரை

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel