ADVERTISEMENT

துபாயில் இந்த வருடத்தின் முதல் ரமலான் சூக்.. எங்கே..?? என்னென்ன எதிர்பார்க்கலாம்..??

Published: 28 Jan 2025, 7:48 PM |
Updated: 28 Jan 2025, 8:06 PM |
Posted By: Menaka

துபாய் முனிசிபாலிட்டியின் ரமலான் சூக் கடந்த ஜனவரி 25, சனிக்கிழமையன்று மூன்றாவது சீசனுக்குத் திரும்பியுள்ளது. இது அடுத்த மாதம் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள தேராவின் கிராண்ட் சூக்கில் அமைந்துள்ள ஓல்டு முனிசிபாலிட்டி ஸ்ட்ரீட் ஸ்கொயரில் அமைந்துள்ள இந்த சந்தையானது, மலிவு விலையில் ரமலான் மாத அத்தியாவசியப் பொருட்களால் நிரம்பியிருக்கும் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

மேலும், இங்கு குடும்பங்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் வரை, மலிவு விலைகளுடன் ஒரு தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் முனிசிபாலிட்டியின் படி, ரமலானுக்கான தயாரிப்பில் பாரம்பரிய பழக்கவழக்கங்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதும், பாரம்பரிய சந்தைகளின் வரலாற்று பாரம்பரியத்தை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக ஊக்குவிப்பதும், முதலீட்டாளர்களை ஆதரிப்பதையும் இந்தச் சந்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் உணவு, தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளின் வணிக காட்சிகள், அத்துடன் நேரடி பொழுதுபோக்கு, ஒர்க் ஷாப் மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் கட்டடக்கலை பாரம்பரியம் மற்றும் பழங்காலத் துறையின் இயக்குனர் அசெம் அல் காசிம் அவர்கள் பேசிய போது, துபாய் முனிசிபாலிட்டி துபாயில் சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் வணிக நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், எமிரேட் முழுவதும் பொது வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கான தேவையை அதிகரிப்பதற்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ரமலான் சூக்கை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT