ADVERTISEMENT

ஒரே நாளில் துபாய் காவல்துறைக்கு கால் செய்த 24,723 பேர்..!! புள்ளிவிபரங்கள் வெளியீடு..!!

Published: 2 Jan 2025, 8:09 PM |
Updated: 2 Jan 2025, 8:13 PM |
Posted By: Menaka

சமீபகாலமாக, துபாய் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை பிரம்மாண்டமாக நடத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேவேளையில், பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சுமூகமான கொண்டாட்டத்தை வழங்கவும் எமிரேட்டின் பல முக்கிய பகுதிகளில்  துபாய் காவல்துறையினரால் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக தயார் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், எந்த நேரத்திலும் மற்றும் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிக்க தயாராக காவல்துறை இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், டிசம்பர் 31, 2024 அன்று நண்பகல் முதல் ஜனவரி 1, 2025 மதியம் வரை அதிகாரத்தின் அவசர மற்றும் அவசரமற்ற எண்களுக்கு சுமார் 24,723 அழைப்புகள் வந்ததாகவும், கூடுதலாக, ஊழியர்கள் மின்னணு தளங்கள் மூலம் 398 ‘livechat’ விசாரணைகளை நிர்வகித்ததாகவும் அதிகாரம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, சுமார் 22,606 பேர் 999 என்ற அவசரகால எண் மூலமாகவும், 2,117 அழைப்புகள் 901 என்ற அவசரமற்ற எண் மூலமாகவும் அதிகாரத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தற்கு தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து பொதுச் செயல்பாட்டுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் துர்கி பின் ஃபாரிஸ் அவர்கள் பேசுகையில், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் 901 கால் சென்டரில் உள்ள ஊழியர்களின் தொழில் நிபுணத்துவத்திற்காகவும், பொதுமக்களின் விசாரணைகளுக்கு விரைந்து பதிலளித்தமைக்காகவும் துபாய் காவல்துறையின் பாதுகாப்பு மற்றும் சமூக மகிழ்ச்சிக்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, இதுபோன்ற அதிக தேவை உள்ள காலங்களில் பொது பாதுகாப்பை உறுதி செய்வதில் துபாய் காவல்துறையின் அர்ப்பணிப்பை இந்த செயல்திறன் நிரூபிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

துபாயில் 999 அவசரநிலைகளுக்காகவும், 901 அவசரநிலை அல்லாத விசாரணைகள் மற்றும் சேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel