ADVERTISEMENT

2024ம் ஆண்டின் உலகின் பரபரப்பான விமான நிலையம்..!! இரண்டாம் இடம் பிடித்த துபாய் ஏர்போர்ட்..!!

Published: 16 Jan 2025, 7:37 PM |
Updated: 16 Jan 2025, 7:37 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையமானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 60.2 மில்லியன் பயணிகளுடன் உலகின் பரபரப்பான விமான நிலையமாக மீண்டும் பெயரெடுத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது என்று உலகளாவிய விமான ஆலோசனை நிறுவனமான OAG தெரிவித்துள்ளது. அதேசமயம், தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டான 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கையில் 12 சதவீதம் அதிகரிப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

DXBயின் இந்த முன்னணி நிலைக்கு எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் ஆகிய விமான நிறுவனங்களின் ஆதரவு குறிப்பிடத்தக்க பங்கை அளித்துள்ளதாகவும், அவை தங்கள் 265 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்குகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் வான்வெளியில் 1 மில்லியனுக்கும் அதிகமான விமான இயக்கங்களைக் கண்டதாக சமீபத்தில் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA), அறிவித்திருந்தது.

இது தவிர டிசம்பர் 22, 2024 அன்று ஷாங்காயிலிருந்து இயங்கிய எமிரேட்ஸ் விமானம் 305 ஆனது, ஒரு மில்லியன் விமானப் பயணத்தைப் பதிவு செய்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. OAG கருத்துப்படி, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் துபாயுடன் ஒப்பிடுகையில், 48.358 மில்லியன் இடங்களைப் பதிவு செய்து, 11.877 மில்லியன் இருக்கைகள் பின்தங்கியுள்ளது, இது 2024 மற்றும் 2023 இல் இடங்களின் எண்ணிக்கையில் 4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ததாக தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து, சுமார் 41.633 மில்லியன் இருக்கைகளுடன் சியோல் இஞ்சியோன் இன்டர்நேஷனலும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக இடம்பிடித்துள்ளது. மற்ற விமான நிலையங்களில், சிங்கப்பூர் சாங்கி 4 வது இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம், இஸ்தான்புல், பாரிஸ் சார்லஸ் டி கோல், பிராங்க்ஃபர்ட் இன்டர்நேஷனல் மற்றும் ஹாங்காங் இன்டர்நேஷனல் ஆகியவை உள்ளன.

அதுவே, சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அட்லாண்டா ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் 2024 இல் 62.7 மில்லியன் இருக்கைகளுடன் மிகவும் பரபரப்பான உலகளாவிய விமான நிலையமாக பெயர் பெற்றுள்ளது. DXB ஆனது சர்வதேச பயணங்களை மட்டும் கையாளுவதால் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த வரிசையில் கத்தாரின் தோஹா விமான நிலையம் 10வது இடத்தில் உள்ளது, இது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பிராந்தியத்தில் இருந்து சுமார் 32.455 மில்லியன் இருக்கைகளுடன் முதல் 10 இடங்களில் இடம்பிடித்த மற்றொரு விமான நிலையமாகும். இது முந்தைய ஆண்டை விட 13 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் தோஹா விமான நிலையம் 2023 இல் 9வது இடத்தில் இருந்து 2024 இல் 10வது இடத்திற்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel