ADVERTISEMENT

ஷார்ஜாவில் உள்ள பார்க்கிற்கு செல்ல வேண்டுமா..?? நுழைவு அட்டையைப் பெறுவது எப்படி??

Published: 29 Jan 2025, 12:59 PM |
Updated: 29 Jan 2025, 12:59 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் பல குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் பொது பூங்காக்கள் அமைந்துள்ளன. வாரயிறுதி அல்லது விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க விரும்பும் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் அருகிலுள்ள பார்க்குகளை தேர்வு செய்கிறார்கள். அத்தகைய பூங்காக்களை அணுக பூங்கா நுழைவு அட்டை (park entry card) தேவைப்படலாம். இவ்வாறு ஷார்ஜா எமிரேட்டில் உள்ள பார்க்கிற்கு செல்ல விரும்பும் குடியிருப்பாளர்கள் பார்க்கிற்கான நுழைவு அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் மற்றும் விலை உள்ளிட்ட விபரங்களை இங்கே பார்க்கலாம்.

ADVERTISEMENT

விண்ணப்ப செயல்முறை

  • ஷார்ஜா முனிசிபாலிட்டியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – http://portal.shjmun.gov.ae
  • உள்நுழைந்ததும் ‘smart services’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது, ‘parks and recreational areas’ வகையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ”request for issuance or renewal of park entry card’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர், Enter சேவையில் கிளிக் செய்யவும்.
  • இப்போது, ​​பெயர், எமிரேட்ஸ் ஐடி எண், குடியிருப்பு பகுதி, குத்தகை ஒப்பந்த எண் போன்ற தொடர்புடைய விவரங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பவும், மேலும் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

தேவையான ஆவணங்கள்

வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கு

  • எமிரேட்ஸ் ஐடியின் நகல்
  • குத்தகை ஒப்பந்தம் அல்லது மின்சார கட்டணத்தின் நகல்
  • சில குடியிருப்பாளர்களுக்கு பணியிடத்திலிருந்து ‘to whom it may concern’  ஆவணம் தேவைப்படலாம்

கட்டணம்

பூங்கா நுழைவு அட்டையை வாங்குவதற்கு 15 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel