ADVERTISEMENT

துபாயின் அன்லிமிட்டெட் பார்க்கிங் சேவை.. எப்படி அணுகுவது..??

Published: 21 Jan 2025, 2:14 PM |
Updated: 21 Jan 2025, 2:54 PM |
Posted By: Menaka

துபாயில் அடிக்கடி பார்க்கிங் பயன்படுத்துபவரா நீங்கள்? தினசரி வாகனத்தை பார்க்கிங் செய்யும் போது, ஒவ்வொரு முறையும் பார்க்கிங்கிற்காக பணம் செலுத்துவது சிரமாமாக இருக்கலாம். நீங்கள் பார்க்கிங் செய்யும் போது, உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த எண்ணினால், மாதாந்திர கட்டணமாக செலுத்த பார்க்கிங் சந்தா (parking subscription) விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

துபாய் முழுவதும் கட்டண பொது பார்க்கிங் சேவைகளை நிர்வகிக்கும் PJSC நிறுவனமான பார்கின் (parkin) வழங்கும் இந்த செலவு குறைந்த தீர்வு, ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமின்றி உங்களுக்குத் தேவையான பல இடங்களில் அடிக்கடி பார்க்கிங் செய்ய அனுமதிக்கிறது.

எனவே, வாடிக்கையாளர்கள் இனி பார்க்கிங் கால அளவைக் கண்காணித்து நேர வரம்புகளைப் புதுப்பிப்பது அல்லது அபராதம் செலுத்துவது குறித்த மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம்.

ADVERTISEMENT

உங்கள் தினசரி பயணத்தை அல்லது பணியை மிகவும் வசதியாக மாற்றக் கூடிய இந்த பார்க்கிங் சந்தா, Parkin ஆப்ஸ் மற்றும் இணையதளம் வழியாகக் கிடைக்கும், இந்த சேவையைப் பயன்படுத்த நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

சந்தா வகைகள்

ப்ளாட்களுக்கான பார்க்கிங் (plots only):

ADVERTISEMENT

இந்த சந்தா, நியமிக்கப்பட்ட பார்க்கிங் மண்டலங்களில் (B மற்றும் D) வசதியான பார்க்கிங் இடங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த பகுதிகள் பொதுவாக பார்க்கிங் மீட்டர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது குறிப்பிட்ட நேர வரம்புகளைக் கொண்டுள்ளன.

சாலையோரம் மற்றும் ப்ளாட்களுக்கான பார்க்கிங் :

இந்தச் சந்தா சாலைகள் மற்றும் தெருக்களில் (மண்டலங்கள் A மற்றும் C) பார்க்கிங் இடங்களையும், நியமிக்கப்பட்ட பார்க்கிங் ப்ளாட்களையும் (மண்டலங்கள் B மற்றும் D) உள்ளடக்கியது. இந்த பகுதிகள் பார்க்கிங் மீட்டர்கள் அல்லது நேர கட்டுப்பாடுகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.

சந்தாவை எங்கு பயன்படுத்தலாம்?

  • ‘plots only’ சந்தாவைத் தேர்வுசெய்தால், அது B மற்றும் D குறியீடுகளால் குறிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே செல்லுபடியாகும்.
  • ‘Roadside and Plots’  சந்தா சாலையோர வாகன நிறுத்தம் (மண்டலங்கள் A மற்றும் C) மற்றும் ப்ளாட் பார்க்கிங் (மண்டலங்கள் B மற்றும் D) ஆகியவற்றை உள்ளடக்கியது.

செல்லுபடியாகாத பகுதிகள்

  • H, J அல்லது K போன்ற பிற குறியீடுகளால் குறிக்கப்பட்ட பகுதிகள்.
  • Tecom அல்லது துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் போன்ற பகுதிகளில் பார்க்கிங் இடங்கள்.
  • பல மாடி பார்க்கிங் வசதிகள்.

செலவு விபரம்

Plots only:

  • ஒரு மாதம்: 250 திர்ஹம்ஸ்
  • மூன்று மாதங்கள்: 700 திர்ஹம்ஸ்

சாலையோரம் மற்றும் பிளாட் சந்தா (roadside and plot parking):

  • ஒரு மாதம்: 500 திர்ஹம்ஸ்
  • மூன்று மாதங்கள்: 1,400 திர்ஹம்ஸ்

கால வரம்புகள்

  • சாலையோர பார்க்கிங்: தொடர்ந்து அதிகபட்சமாக நான்கு மணிநேரம்.
  • பிளாட் பார்க்கிங்: அதிகபட்சம் 24 மணிநேரம்.

எப்படி விண்ணப்பிப்பது?

  1.  முதலில் பார்க்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://parkin.aeஐப் பார்வையிடவும். அதில் ‘Individuals’  பகுதிக்குச் சென்று, ‘Subscriptions’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் சந்தா வகையைத் தேர்ந்தெடுத்து, ‘Apply Now’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் UAEASS-ஐ பயன்படுத்தி உள்நுழையவும் அல்லது guest user-ஆக செயல்முறையைத் தொடரவும்.
  3. சந்தா தொடங்கும் தேதியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் தொடர்பு விவரங்கள் மற்றும் எமிரேட்ஸ் ஐடி எண்ணை வழங்கவும்.
  4. சரிபார்ப்பிற்காக SMS மூலம் அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிடவும்.
  5. குறியீடு, எமிரேட், வாகன வகை மற்றும் எண் உள்ளிட்ட வாகன விவரங்களைச் சேர்க்கவும்.
  6. அடுத்தபடியாக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் சந்தாக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  7. வெற்றிகரமாக பணம் செலுத்தியவுடன், உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் சந்தா தானாகவே உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டுடன் இணைக்கப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்                        Link: Khaleej Tamil Whatsapp Channel