ADVERTISEMENT

ICP ஐ புதுப்பித்த அமீரக அரசு.. குடியிருப்பாளர்கள் இனி விசா சேவைகளை எளிதாக அணுகலாம்..!!

Published: 31 Jan 2025, 9:32 AM |
Updated: 31 Jan 2025, 9:32 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) அதன் வலைத்தளத்தை புதுப்பித்து, புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், அமீரக விசா மற்றும் ரெசிடென்ஸி சேவைகளுக்கான புதிய மற்றும் மேம்பட்ட இணையதளம் நேற்று (வியாழக்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு வேகமான, திறமையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதியளிக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ICP வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, லோடிங் நேரம் மேம்பட்டுள்ளதால், தாமதங்களைக் குறைத்து, விண்ணப்பதாரர்கள் பரிவரத்தனையை விரைவாக முடிக்கலாம் என்றும், பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் சேவைகளை எளிதாக அணுகலாம் என்றும் கூறப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட ICP இணையதளத்தில் வந்துள்ள  புதிய அம்சங்கள்:

  1. குரல் வழிசெலுத்தல் (Voice navigation): இந்த அம்சம் டைப்பிங் செய்யவோ அல்லது ஸ்க்ரோல் செய்யவோ இல்லாமல், தகவல் மற்றும் சேவைகளை சிரமமின்றி தேட பயனர்களுக்கு உதவும்.
  2. ஊடாடும் வழிகாட்டி(Interactive guide): இந்த கருவி ICP சேவைகளை வகைப்படுத்துகிறது, இது ஒவ்வொரு சேவைக்கும் தேவையான தகவல், நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளை விரைவாக அணுக பயனர்களை அனுமதிக்கிறதுடன், மென்மையான விண்ணப்ப செயல்முறைகளை எளிதாக்குகிறது.
  3. நெகிழ்வான அணுகல் விருப்பங்கள் (Flexible access options): மாறுபட்ட வாசிப்பு மற்றும் பிரவுசிங் தேவைகளை ஆதரிக்கும் அம்சங்கள் இதில் அடங்கும். பயனர்கள் மேம்பட்ட வண்ணங்கள், எழுத்துருக்கள் (fonts) ஆகியவற்றைக் கொண்டு சேவைகளை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறது.

இது குறித்து ICPயின் இயக்குநர் ஜெனரல் மேஜ்-ஜெனரல் சுஹைல் அல் கைலி  கூறியிருப்பதாவது: “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த நேரத்திலும் உயர்தர சேவைகளை வழங்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம், மேலும் இந்த புதிய தளம் அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், இணையதளத்தின் மூலம், நடத்தப்படும் சமீபத்திய முன்னேற்றங்கள், முன்முயற்சிகள், திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel