ADVERTISEMENT

‘HyperMax’ என்ற புதிய சில்லறை விற்பனை பிராண்டை ஓமானில் தொடங்கும் மஜித் அல் ஃபுத்தைம் குரூப்!! புதிதாக 2,000 வேலைகள் உருவாகும் என தகவல்…

Published: 10 Jan 2025, 1:38 PM |
Updated: 10 Jan 2025, 1:38 PM |
Posted By: Menaka

துபாயைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எமிராட்டி ஹோல்டிங் நிறுவனமான மஜித் அல் ஃபுத்தைம் குரூப், ‘HyperMax’ என்ற புதிய சில்லறை விற்பனை பிராண்டை அமீரகத்தின் அண்டை நாடான ஓமானில் துவங்கியுள்ளது. மேலும் ஓமான் முழுவதும் 11 இடங்களில் இந்த விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலம் ஹைப்பர்மேக்ஸ் ஓமானில் 2,000 நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கும் என்றும், ஒரு விதிவிலக்கான ஷாப்பிங் அனுபவத்தை வழங்க திறமையான பணியாளர்களை வளர்க்கும் என்றும் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குழுமம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஹைப்பர்மேக்ஸ் குறைந்த விலைகள், சலுகைகள் மற்றும் நுகர்வோர் நட்பு, நவீன ஷாப்பிங் அனுபவத்தில் பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மஜித் அல் ஃபத்தைம் குரூப் வெளியிட்ட ஒரு அறிக்கையில் , ஹைப்பர்மேக்ஸிற்காக ஓமானில் இருக்கும் நெட்வொர்க்கை மேம்படுத்துவதாகவும், இது உயர்தர தயாரிப்புகள், சலுகைகள் மற்றும் புதிய உள்நாட்டு தயாரிப்புகளை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான பிராண்ட் முன்மொழிவை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், அந்த அறிக்கையில், “ஓமான் மஜித் அல் ஃபுத்தைமின் முக்கிய சந்தையாகும், மேலும் குழுவானது வணிகங்கள், வணிக வளாகங்கள், சமூகங்கள், சில்லறை வணிகம் மற்றும் ஓய்வுநேரங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைக் கொண்டுள்ளது, இது ஓமான் நாட்டிற்கு எங்களின் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த குழுவானது இந்த வார தொடக்கத்தில் அதன் சில்லறை வர்த்தக பிராண்டான Carrefourஇன் செயல்பாடுகளை ஓமானில் நிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel