ADVERTISEMENT

UAE: முதலாளிக்கு எதிராக புகார் கொடுப்பவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது!! MoHRE வெளியிட்ட அறிவிப்பு..!!

Published: 3 Jan 2025, 7:42 PM |
Updated: 3 Jan 2025, 7:42 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE), முதலாளிக்கு எதிராக அமைச்சகத்திடம் முறையான புகாரை பதிவு செய்த ஊழியர்களையோ அல்லது வழக்கு தொடர்ந்த ஊழியர்களையோ பணிநீக்கம் செய்வது அல்லது அபராதம் விதிப்பது போன்றவை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கருதப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அத்தகைய நடத்தைகளில் ஈடுபடும் தனியார்துறை முதலாளி, நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான தொகையுடன் ஊழியருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தனியார் துறை ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்காற்று அபராதங்களை விதிக்கும் அளவுகோல்களையும் MoHRE வெளியிட்டுள்ளது.

MoHRE வெளியிட்ட அளவுகோல்கள்:

  1. பணி தொடர்பான தரவு மற்றும் தகவல் தொடர்பான இரகசியத்தன்மை மீறலின் அளவு.
  2. நிறுவனத்தில் உள்ள ஊழியர் அல்லது பிற தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் மீறலின் தாக்கம்.
  3. மீறலின் விளைவாக ஏற்படும் நிதி விளைவுகள்.
  4. ஸ்தாபனம் மற்றும் அதன் ஊழியர்களின் நற்பெயர் மீதான மீறலின் விளைவு.
  5. குற்றமிழைத்த ஊழியர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்.
  6. ஊழியர் செய்த பல்வேறு மீறல்களின் மறுநிகழ்வு விகிதம்.
  7. செய்த மீறலில் தார்மீக அல்லது குற்றவியல் அம்சத்தைச் சேர்ப்பது.

ஊழியர்கள் என்ன செய்யலாம்?

ஒரு தனியார்துறை ஊழியர், நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக உணர்ந்தால், பணிநீக்கத்திற்கான காரணங்களை மறுபரிசீலனை செய்ய MoHRE இல் புகார் அளிக்கலாம் மற்றும் இருதரப்பினருக்கும் இடையே சுமூகமான தீர்வை எட்ட முயற்சி செய்யலாம்.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தை அமைச்சகம் சுமூகமாகத் தீர்க்கத் தவறும்பட்சத்தில், அந்த வழக்கு உரிய நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். ஊழியர் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று நீதிமன்றம் தீர்மானித்தால், அவருக்கு இழப்பீடு வழங்க முதலாளிக்கு உத்தரவிடலாம்.

இழப்பீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

வேலையின் தன்மை, ஊழியருக்கு ஏற்படும் தீங்கின் அளவு மற்றும் அவர்களின் சேவையின் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீடு நீதிமன்றத்தால் மதிப்பிடப்படும். எவ்வாறாயினும், எல்லா சந்தர்ப்பங்களிலும், இழப்பீட்டுத் தொகையானது ஊழியரின் கடைசி ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட மூன்று மாதங்களுக்கான ஊதியத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.

ADVERTISEMENT

இழப்பீட்டிற்கு கூடுதலாக, கிராஜுட்டி, அறிவிப்பு கால இழப்பீடு மற்றும் முதலாளி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமையையும் ஊழியர் தக்க வைத்துக் கொள்வார் என்று அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் கூறியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel