ADVERTISEMENT

அமீரகத்தில் இந்தாண்டு சம்பளம் உயர்த்தப்படும் என 76 சதவீத ஊழியர்கள் நம்பிக்கை..!! வெளியான கருத்துக்கணிப்பு..!!

Published: 17 Jan 2025, 9:42 AM |
Updated: 17 Jan 2025, 9:42 AM |
Posted By: Menaka

உலகளாவிய ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனமான ‘Hays’ சமீபத்தில் வெளியிட்ட GCC சம்பள வழிகாட்டி 2025 இன் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 48 சதவிகிதத்தினர் 2024 இல் சம்பள உயர்வைப் பெற்றதாகவும், 74 சதவிகிதத்தினர் நடப்பு ஆண்டான 2025 இல் தங்கள் சம்பளம் அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

GCC சம்பள வழிகாட்டி 2025 ஆனது, வளைகுடா பகுதி முழுவதும் கிட்டத்தட்ட 2,000 முதலாளிகள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஆகும். இது கிட்டத்தட்ட 400 பணியிடங்களுக்கான சம்பளத் தரவையும், UAE மற்றும் GCCஐ சேர்ந்த தொழிலாளர்களின் போக்குகள் பற்றிய நுண்ணறிவையும் உள்ளடக்கியதாகும்.

இந்த கணக்கெடுப்பில், 2024 இல் UAE ஊழியர்கள் பொதுவாக 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சம்பள உயர்வுகளைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதேசமயம், நாட்டில் உள்ள 75 சதவீத முதலாளிகள் தங்கள் நிறுவனத்தில் 2025 இல் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் GCC சம்பள வழிகாட்டி 2025 இல் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அமீரகத்தை பொருத்தவரை முதலாளிகளில் பத்தில் எட்டு பேர் அதாவது 77 சதவீதம் பேர், நாட்டின் பொருளாதாரத்தின் மேக்ரோ பொருளாதாரக் கண்ணோட்டம் வலுவாக இருப்பதால், இந்த ஆண்டு நிரந்தரப் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், 65 சதவீத UAE தொழில் வல்லுநர்கள் இந்த ஆண்டு வேலைகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சம்பளம், சலுகைகள் தொகுப்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மிக முக்கியமான காரணிகளாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எமிராட்டிகளின் சம்பளத்தில் 16% உயர்வு

கடந்த ஆண்டு, 55 சதவீத அமீரகக் குடிமக்கள் தங்கள் சம்பளத்தில் எந்த மாற்றமும் காணவில்லை என கூறியுள்ளனர். மேலும், சம்பள உயர்வு பெற்றவர்களின் பொதுவான சம்பள அதிகரிப்பு விகிதம் 16 சதவீதம் வரை இருந்ததாகவும், அதிலும் ஒரு புதிய வேலையிலிருந்து பெரும்பாலான சம்பள உயர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், 72 சதவீத எமிராட்டிகள் 2025 இல் தங்கள் சம்பளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கணக்கெடுப்பு முடிவுகள் கூறுகின்றன.

ADVERTISEMENT

2025 ஆம் ஆண்டில், சுமார் 67 சதவிகிதம் பேர் வேலையை மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது 2024 ஆம் ஆண்டில் மற்றொரு நிறுவனத்திற்குச் செல்லத் திட்டமிட்ட 23 சதவிகித மக்களில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. சம்பளத்தைத் தவிர, கற்றல் மற்றும் வளர்ச்சியின் பற்றாக்குறை காரணமாகவும் வேலைகளை மாற்றுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பணியமர்த்தல் உத்திகள் அனுபவம் வாய்ந்த குடிமக்களைத் தேடுவதில் கவனம் செலுத்துவதால், அமீரகத்தின் எமிராட்டிசேஷன் திட்டம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. அத்துடன் பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் தற்போது நிரந்தர வேலை ஒப்பந்தங்கள் மூலம் பணியமர்த்தப்படுவதாகவும், ஒரு சிறிய சதவீத மக்கள் மட்டுமே தற்காலிக வேலைவாய்ப்பைத் தேர்வு செய்வதாகவும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel