ADVERTISEMENT

துபாய் மெட்ரோ இயக்க நேரம் நீட்டிப்பு.. RTA வெளியிட்ட அறிக்கை….

Published: 9 Jan 2025, 8:54 PM |
Updated: 9 Jan 2025, 8:56 PM |
Posted By: Menaka

வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதி துபாய் மெட்ரோ இயங்கும் நேரமானது நீட்டிக்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அன்றைய தினம் துபாய் மராத்தான் நடைபெற உள்ளதால் துபாய் மெட்ரோவின் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாய் மெட்ரோ ஜனவரி 12 ஆம் தேதி காலை 8:00 மணிக்கு பதிலாக அதிகாலை 5:00 மணிக்கே செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

உலகின் முதன்மையான நீண்ட தூர ஓட்ட நிகழ்வுகளில் ஒன்றான துபாய் மராத்தான் 1998 முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. உலகின் சில சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த மராத்தான் போட்டியின் போது சுமூகமான போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் மெட்ரோ நேரம் நீட்டிக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel