ADVERTISEMENT

ஷார்ஜாவில் வாகன சோதனைக்கு இனி நேரில் செல்ல தேவையில்லை.. புதிய ஆப் அறிமுகம்..!!

Published: 9 Jan 2025, 8:45 AM |
Updated: 9 Jan 2025, 8:45 AM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் வாகனங்களுக்கான தொழில்நுட்ப ஆய்வு நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் புதிய சேவையானது குடியிருப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், குடியிருப்பாளர்கள் இப்போது Rafid ஆப் எனும் ஸ்மார்ட் அப்ளிகேஷன் வழியாக நேரில் செல்லாமலேயே வாகன சோதனைகளை முடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முன்முயற்சியானது செயல்திறனை மேம்படுத்துவதற்கும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக கொண்டுவரப் பட்டுள்ளதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்தச் சேவையை அணுகுவதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் பதிவுசெய்யப்பட்ட தனியார் வாகனங்களின் உரிமையாளர்களை இலக்காகக் கொண்டுள்ள இந்த சேவையைப் பெற, அந்த வாகனம் எட்டு ஆண்டுகளுக்கு மேல் பழமையானதல்ல என்றும் இதற்கு முன்னர் மேற்கொண்ட வாகன சோதனையானது 18 மாதங்களுக்கும் மேலாக இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், இந்தச் சேவையை டிரெய்லர் வாகனங்கள் அல்லது ‘மொபைல் ஹோம்ஸ்’ உரிமையாளர்களும் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஷார்ஜா காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, பயனாளிகள் தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்த 24 மணி நேரத்திற்குள் ஆய்வு அறிக்கையைப் பெற எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதுப்பித்தல் செயல்முறைகளை எளிதாக்குகிறது.

Rafid ஆப் மூலம் வாகன சோதனை சேவையை அணுகுவது எப்படி?

  • உங்கள் மொபைலில் ‘Rafid’ ஆப்ஸை பதிவிறக்கி, ‘Remote Inspection’ ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது, புதிய ஆய்வுக் கோரிக்கையைச் (remote inspection) சேர்ப்பதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  • உங்கள் வாகனம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால், அதைத் தேர்ந்தெடுக்கவும். இல்லையெனில், உங்கள் வாகனத்தைச் சேர்க்கத் தேவையான தகவலை உள்ளிட்டு, ‘verify vehicle details’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஆப்ஸில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பட்டியலுக்குச் சென்று, ‘renewal inspection’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் தொலைபேசி எண் மற்றும் அடையாள எண்ணை உள்ளிடவும்.
  • ஆய்வுக்கு தேவையான படங்களை இணைக்கவும்.
  • உங்களிடம் ஏதேனும் கூடுதல் ஆவணங்கள் இருந்தால் (எ.கா., விபத்து அறிக்கைகள், வண்ண மாற்ற அனுமதிகள்), அவற்றையும் பதிவேற்றவும்.
  • அனைத்து தகவல்களும் ஆவணங்களும் சரியானவை என்பதை உறுதிசெய்த பிறகு, உங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
  • சமர்ப்பித்த பிறகு உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும்.
  • மேற்கூறிய அனைத்து படிகளை முடித்த பிறகு, அனுமதிச் செய்திக்காகக் காத்திருக்கவும், அதில் ஆய்வுச் செயல்முறையை முடிக்க கட்டண இணைப்பு இருக்கும். கட்டணத்தை செலுத்தி ஆய்வறிக்கையைப் பெறலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT