மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்லாக்லைனர் ஜான் ரூஸ், துபாயில் உள்ள முக்கிய பகுதியான ஜுமேரா எமிரேட்ஸ் டவர்ஸின் இரண்டு கட்டிடங்களுக்கு இடையேயான தூரத்தை அந்தரத்தில் கடந்து, உலகின் முதல் ஹைலைன் நடையை நிகழ்த்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ‘1 Billion Followers Summit’ மூன்றாவது பதிப்பின் ஒரு பகுதியாக நடந்த இந்நிகழ்வில், தலைகீழாகத் தொங்குவது போன்ற ஒரு துணிச்சலான ஸ்டண்ட்டை இவர் நிகழ்த்தி காட்டியதை அனைவரும் பிரம்மிப்புடன் பார்த்து வியந்தனர்.
ஐக்கிய அரபு அமீரக அரசு ஊடக அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு, ‘Content for Good’ என்ற கருப்பொருளின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றாவது முறையாக ஜனவரி 11 முதல் 13 வரை துபாயின் எமிரேட்ஸ் டவர்ஸ், துபாய் இன்டர்நேஷனல் பினான்ஷியல் சென்டர் மற்றும் மியூசியம் ஆஃப் தி ப்யூச்சர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடந்தது.
இதனையொட்டி துபாயின் வானளாவிய கட்டிடங்களின் பின்னணியுடன் ரெட் புல் தடகள வீரர் ஜான் ரூஸ், 224 மீட்டர் (734 அடி) உயரத்தில் 100 மீட்டர் நீளத்திற்கு முன்னும் பின்னுமாக நடந்து சென்று அசாதாரண சாகசம் புரிந்து பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel