ADVERTISEMENT

துபாய் முனிசிபாலிட்டி நடத்தும் ‘சூக் அல் ஃப்ரீஜ்’..!! நுழைவு இலவசம்.. குடியிருப்பாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம்??

Published: 16 Jan 2025, 2:38 PM |
Updated: 16 Jan 2025, 2:38 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கிவிட்டதால், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனுபவிக்க சிறந்த மற்றும் மலிவான வெளிப்புற நடவடிக்கைகளைத் தேடி வருகின்றனர். அத்தகைய அனுபவத்தைத் தேடுபவர்களுக்கு துபாய் முனிசிபாலிட்டியால் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வான ‘Souq Al Freej’ சிறந்த தேர்வாக இருக்கும்.

ADVERTISEMENT

ஆம், இந்த சமூகத்தை மையமாகக் கொண்ட சந்தை குளிர்கால சீசனில் உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில், வீட்டு வணிகங்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகளைக் காட்டுகிறது. இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவை வளர்க்கும் அதே வேளையில் உயர்தர தயாரிப்புகளை போட்டி விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

அத்துடன், குடியிருப்பாளர்கள் எமிராட்டி பண்ணைகளில் இருந்து நேரடியாக பொருட்களை வாங்குவது மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு சூக் அல் ஃப்ரீஜ் எனும் இந்த சந்தை ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. எனவே, குடியிருப்பாளர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடியவிருக்கும் இந்த சந்தையை இலவசமாக பார்வையிடலாம்.

ADVERTISEMENT

இரண்டு கட்ட ஃபெஸ்டிவல்

சூக் அல் ஃப்ரீஜ் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டம் கடந்த 2024 டிசம்பரில் அல் வர்கா பூங்காவில் நடைபெற்ற  நிலையில், தற்போது இரண்டாம் கட்டம் அல் பர்ஷா பான்ட் பூங்காவிலும் நடைபெறுகிறது. திருவிழாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • இடம்: அல் பர்ஷா 3 பாண்ட் பார்க்
  • தேதிகள்: 19 ஜனவரி 2025 வரை
  • நேரம்: தினமும் மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்
  • நுழைவு: இலவசம்

ஒரு துடிப்பான சந்தை மற்றும் பொழுதுபோக்கு மையம்

சூக் அல் ஃப்ரீஜ், இந்த சீசனில் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சலுகைகளை கொண்டுள்ளது. வீடு சார்ந்த வணிகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 30 ஸ்டால்களையும், உணவு மற்றும் பான விற்பனையாளர்களுக்காக 10 கியோஸ்க்களையும் பார்வையாளர்கள் ஆராயலாம்.

ADVERTISEMENT

ஷாப்பிங் மட்டுமின்றி, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ஒர்க்ஷாப், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன. எனவே, சூக் அல் ஃப்ரீஜ் குடும்ப வேடிக்கை மற்றும் ஓய்வுக்கான சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel